நிலவுக்கு வான் சொந்தம் முழுக்கதை
Nilaa

நிலவுக்கு வான் சொந்தம்
ஆசிரியர் : சுஜாசந்திரன்
அத்தியாயம் 1
திருநெல்வேலி எஸ்பி ஆபீஸ்..
எங்கே காணினும் காக்கிச் சீருடை மிடுக்கான பார்வையில் சட்டம் தன் கடமையை செவ்வனே செய்யும் என்பது போல் ஒவ்வொரு காவல் அதிகாரிகளும் அந்த நாளுக்குரிய வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.... அலுவலக வேலையில் சில பெண் பணியாளர்களும் அதில் அடக்கம்.....
சைரன் வைத்த போலீஸ் வாகனம் அலுவலகத்துக்குள் நுழைய... ஒரு கணம் அத்தனை கடைநிலை காவலாளிகளும் தங்கள் தொப்பியை சரி செய்து நிமிர்வாக நின்று வரும் உயர் அதிகாரிக்கு சல்யூட் அடிக்க ஆரம்பித்தனர்... அனைவருக்கும் சிறு தலயசைப்பை கொடுத்தபடி நேரகொண்ட பார்வையும், நிமிர்ந்த நடையும் , கண்ணால் எதிராளியை இனம் கண்டு விடும் திறமையும் கொண்டவன் போல அந்த தரைத்தளம் அதிர படிகளில் தாவி ஏறி உள்ளே போனான்.....
அன்பழகன் ஐபிஏஸ்... இரண்டு நாளுக்கு முன்புதான் ஐபிஏஸ் பணி ஆணை பெற்று வேலையில் சேர்ந்தான்....
சார்......
எஸ் நான் கேட்டது ரெடி பண்ணியாச்சா...
ஆமா சார் ரைட்டர் எல்லாத்தையும் பைல் வாரியா பிரிச்சி வச்சிருப்பாங்க....
ம்ம் ..என எஸ்பி சிவாவோடு அன்பு ரைட்டர் அறையை நோக்கி நடந்து போனான்...சிவா கதவை திறந்து விட அன்பு சிவாவுக்கு பின்னால் உள்ளே நுழைந்தவன் கண்கள் ஒரு நொடி அதிர்ச்சியை வெளிக்காட்டியது...
சார் இவங்க ரைட்டர் கிருத்திகா வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் ஆகுது...தன் முகமாற்றத்தை மறைத்து கொண்ட அன்பு...
பைல் என தன் கையை நீட்டினான்..
குட்மார்னிங் சார் என்று அந்த பெண் ஏற்கனவே பிரித்து வைத்திருந்து பைல்களை எடுத்து அன்பு கையில் கொடுத்தான்....அவன் விழிகள் அவளைதான் பார்வையிட்டது....
மஞ்சளை குலைத்து சந்தனத்தில் தோய்த்து எடுத்தது போல் நிறம்.... வில்லென வளைந்த புருவம் , கருவண்டாக இருவிழிகள், புல்லின் நுனியில் பனித்துளி போல கூர்நாசி அதில் ஒற்றைக்கல் மூக்குத்தி இன்னும் பேரழகு... காதுவைளவில் ஆடம்பரம் இல்லாத ஒரு தோடு.. கழுத்தில் அதேப்போல் சிறிய நூல் போல் ஒரு தங்கச்செயின்.... அவள் முன்பு அணிகலன்கள் அனைத்தும் மண்டியிடத்தான் வேண்டும் என அவன் மனம் நினைக்காது இல்லை... கம்பனும், வாலியும் இக்காலத்தில் பிறந்திருந்தால் பல கவிக்கு இவள் சொந்தக்காரி ஆகியிருப்பாள்... கணுக்கால் கூட அழுக்கு இல்லாத அலட்டாத மொத்த அழகுக்கும் சொந்தக்காரி... கண்ணில் ஜீவன் இல்லை உதட்டை தாண்டிய சிரிப்பில் எள்ளளவு கூட உயிர் இல்லை...
சார் இவங்க மிஸஸ் கிருத்திகா பாஸ்கர் ...
ம்ம் என ஒரு தலையசைப்போடு அவளை கடந்து தன் அறைக்குள் அன்பு சென்றுவிட்டான் மனமோ மெழுகில் போட்ட புழுவாக துடிதுடித்தது.... அவன் வேதனையை கையில் வைத்திருந்த காகித்தாள் எவ்வாறு தாங்கும் கசங்கி கஞ்சாகி போனது.... அருகில் இரு காவலர்கள் பேசிய வார்த்தையில் அவன் நரசிம்ம அவதாரம் கொண்டான் ஆனால் அதை கடந்து எதையும் செய்ய முடியாது பல்லை கடித்து தன் ஆத்திரம் அடக்க முயன்றான்...
பார்க்க அம்சமா அழகா இருக்கு நானும் உதவி பண்ற சாக்குல போய் பேசிதான் பார்க்கிறேன் மசிய மாட்டைக்குது பொண்ணு பார்க்க பாவமா இருக்கு ..ஆனா உசாரா இருக்கு சார் என்று தன் வேலையில் கவனமாக இருந்த கிருத்திக்காவை வக்கிரமாக பார்த்து கொண்டே ஒருவர் கூறினார்...
நானும் தான் முதல் நாளிலிருந்து டிரை பண்றேன் எங்க அந்த பொண்ணு என் முகத்தை கூட எட்டி பார்க்க மாட்டைக்குது...
முதல்ல எல்லாரும் கண்ணகி போல சீன் போடத்தான் செய்வாங்க சார்.. நாம கொடுக்க வேண்டியதை கூட்டி கொடுத்தா அப்புறம் எல்லாம் தானா நடக்கும்....
அது கூட நான் டிரை பண்ணி பார்திட்டேன் சார் .... ம்ஹூம் சுவற்றில அடிச்ச பந்து போல திரும்பி வந்திடுது....
சில பொண்ணுங்கள பொறைமையாதான் ஹேண்டில் பண்ணணும் சார் இப்பதான வந்திருக்கு நிதானமா முயற்சி செய்வோம்..இந்த வார்த்தைகள் யாவும் அன்பு செவிகளில் திராவகமாக வந்து விழுந்தது... நெற்றிக்கண் திறந்தான்... அவர்களை வெறி அடங்க அடிக்க கை நரம்புகள் புடைத்தது.... ஆனால் என்ன காரணம் சொல்வான்....
யாரோ ஒரு பெண்ணை பேசியதற்காக அடித்தேன் என்றா? முடியாது மேஜை விளிம்மை கெட்டியாக பிடித்து கொண்டவன்.. நெற்றியை நீவி யோசித்தான் ஏன் ஏதற்கு என காரணமே கூறாது பேசிய இருவரையும் பந்தபஸ்து பணியில் வெயிலில் போட்டு வாட்டி வதைக்க உத்தரவிட்டான்....
வேலையில் கவனம் செலுத்த முயன்று தோற்று போனான் தன் கண்முன்னால் வேலை செய்த கிருத்திகாவை பார்க்க கூடாது என மூளைக்கு கட்டை கொடுத்து அது அவன் கட்டளைக்கு மறுப்பு தெரிவிக்க...அந்த கோவத்தையும் அவள் மீது திருப்பி கொண்டான்....
இவள யாரு வேலைக்கு வர சொன்னா..அதுவும் இங்க.. வீட்டில சொன்னா இவளுக்கு எங்க போச்சி அறிவு இடியட் .... என திட்டி தீரத்தான்..
மாலை ஐந்து மணிக்கு கிருத்திகா வேலையை முடித்து வீட்டுக்கு கிளம்பினாள்..அன்பு என்ன நினைத்தானோ தன் வாகனத்தை எடுத்து கொண்டு அவள் இருசக்கர வாகனம் பின்னால் சிறு இடைவெளி விட்டு பின் தொடர்ந்தான்...
கிருத்திகா தன் வண்டியை போலீஸ் குவாட்ரஸூக்குள் விட அன்பு வாகனத்தை வெளியே நிறுத்தி கொண்டான்... தன் ஹெல்மெட்டை கழட்டி பைக்கில் மாட்டிகிட்டு அவள் வீட்டு கதவு பக்கம் போகவும் .. மூன்று வயது அவள் மகன் பாலா
அம்மா ஆஆஆ என ஓடி வந்து கிருத்திகா காலை கட்டி கொண்டது..... மழைச்சாரல் போல சிறிய புன்னகை அவள் முகத்தில் மின்னலாக தோன்றி மறைய .. குனிந்து தன் மகனை வாரி அணைத்து கொண்டாள்.....
தூரத்திலிருந்து பார்த்து கொண்டிருந்த அன்புவின் கண்கள் அவள் கையில் வைத்திருந்த சிசுவை ஏக்கத்தோடு பார்த்தது.....
உள்ளே போன கிருத்திகா தன் கையில் வாங்கி வந்திருந்த மல்லிகை சரத்தை எடுத்தாள்.. தன் முன்னால் நிழலாக போட்டோவில் சிரித்தபடி இருந்தான் ஏ.எஸ்.பி பாஸ்கரன் ... துணையாக இருக்க வேண்டிய துணைவன் நிழலாக அவளோடு இருக்கிறான்... கண்கள் தாண்டிய நீரை புடவையில் துடைத்து கொண்டு ... தன் மகன் கரம் கொண்டு சரத்தை போட்டோவில் மாட்டி விட்டு விளக்கை பற்ற வைத்தாள்...அந்த ஒளி வீட்டுக்கு பிரகாசம் கொடுத்தது, ஆனால் அவள் வாழ்வோ இருட்டில்
கைம்பெண்ணாக ஒன்றரை வயது குழந்தையோடு இளம் விதவையாக திக்குதெரியாத காட்டில் விட்டது போல் இந்த சமுதாயத்தை எப்படி எதிர்த்து போராட என்று தினம் தினம் குமுறி குமுறி தன் இரவை தொலைத்து கொண்டிருக்கும் அவள் வாழ்வு வெளிச்சம் பெறுமா?
2 முகில் தேடா என் ஹான் மழையே!!
அன்பு எவ்வளவு நேரம் அந்த வீட்டை வீட்டையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் என்று அவனுக்கே தெரியாது.. பின்னால் வந்த வண்டியில் ஹாரன் சத்தத்தில் .. தன் தலையை உலுக்கிக்கொண்டு நிமிர்ந்து பார்த்தான்...தானாக பெருமூச்சு வந்தது, வண்டியை திருப்பிக்கொண்டு வேலைகளை செய்வதற்கு புறப்பட்டான் மனமே இல்லாமல்...
இரவு நிலவின் மடியில் தாயும் சேயும் அமர்ந்திருந்தனர்.. மொட்டை மாடி நிலா வெளிச்சத்தில் தன் மகனுக்கு சோறு ஊட்டிக் கொண்டிருந்தாள் கிருத்திகா..
அம்மா, அப்பா நிலாவிலிருந்து நம்மள பார்கிறாரா...
ஆமாடா பட்டுக்குட்டி .. நம்பள டெய்லியும் அந்த நிலாவிலிருந்து பாப்பார்..
அப்போ எப்போ நம்பல பார்க்க நேர்ல வருவார் சின்னஞ்சிறு மொட்டு எல்லாருகுகும் அப்பா இருக்கிறது என் அப்பா எங்கே என கேட்டு தொல்லை செய்யவும்..அவனை சமாதானப்படுத்துவதற்காக .. தந்தை நிலாவில் இருக்கிறார் என்று சொல்லி சமாதானம் செய்து வைத்திருக்க... அவனோ தினமும் அந்த நிலாவை காட்டி அப்பா வா எப்போ வருவார் என அவளிடம் இயக்கத்தில் கேட்கும் பொழுதெல்லாம் கிருத்திக்காவுக்கு நெஞ்சு வெடித்து விடுவது போல் வலிக்கிறது... வலியைத் தாங்கியே வளர்ந்தவள் இதையும் தாங்கிக் கொண்டு.. மென் சிரிப்பை பதிலாக கொடுத்தவள்
சீக்கிரம் வருவாங்கடா... உன்ன போலத்தான அப்பாவுக்கும் உன்ன பார்க்க ஆசையா இருக்கும்.. அதனால சீக்கிரமே , அங்கே எல்லா வேலையும் முடிச்சுட்டு உன்ன பார்க்க வருவார்..
அப்படியா அப்போ அப்பா வரும் போது பக்கத்து வீட்டு ரோஷன் அப்பா வாங்கிட்டு வர்றது போல பொம்மை, சாக்லேட் எல்லாம் வாங்கிட்டு வருவாங்களா.. பிள்ளை தகப்பன் பாசத்திற்கு எவ்வளவவாக ஏங்கியிருக்கிறது என்பது அவளுக்கு கண்கூடாகத் தெரிந்தது.. ஆனால் கையறுநிலையில் அல்லவா அவள் இருக்கின்றாள்... உன் தகப்பன் வரவே முடியாத இடத்திற்கு சென்றுவிட்டான் மகனே என மார்பில் சாயத்து கதற தோன்றுகிறது.. ஒன்றும் அறியாத பால்மணம் மாறாத அவனிடம் கூற முடியாமல் தவித்தாள் .... எல்லாவற்றிற்கும் சிறிய தலையசைப்பை பதிலாக கொடுத்தவள் தன் மகனை மடியில் போட்டு தூங்கவைத்தாள்...
அம்மாடி கிருத்திகா என அழைத்துக் கொண்டே அவள் மாமியாரும், பாஸ்கரின் தாய் லெட்சுமி மாடி ஏறி வர.. கிருத்திகா கண்ணில் நின்ற ஒரு துளி கண்ணீரை அவருக்கு தெரியாமல் சேலை முந்தானையில் ஒற்றி எடுத்துக் கொண்டவள்
வாங்க அத்தை சாப்டீங்களா, மாத்திரை போட்டிங்களா.. உங்களுக்குத்தான் மூட்டுவலி இருக்குதுல்ல.. எதுக்கு இவ்வளவு தூரம் நடந்து வந்தீங்க..
அதுல என்ன இருக்குடா.. பாலா இன்னைக்கு ஃபுல்லா ஒரே அழுகை , விளையாட கூட்டிட்டு போன்னு பார்க் வேற தூரமா இருக்குதா.. அவனை என்னால தூக்கி வச்சுக்கிட்டு நடக்க முடியல... நாளைக்கு நீ ஃப்ரீயா இருந்தா, கொஞ்சம் கூட்டிட்டு போறியா.. பாவம் புள்ளைக்கு என்ன தெரியும்? நம்ம கஷ்டம் நம்மளோட போகட்டும் அதாவது.. கொஞ்சம் சந்தோஷமா இருக்கட்டும் எத்தனை நாளைக்கு இப்படி வீட்டுக்குள்ளேயே அடைச்சு வைக்கிறது...
சரி அத்தை நாளைக்கு எனக்கு லீவுதான் பாலாவ கூட்டிட்டு பார்க் போயிட்டு வந்திடுறேன்.. அப்படியே காய்கறி எல்லாம் தீர்ந்து போச்சுன்னு சொன்னீங்கல்ல போயி அதையும் வாங்கிட்டு வந்துடுறேன்.. நீங்க போய் தூங்குங்க அத்தை நான் இவன தூக்கிட்டு வர்றேன் என்று மெல்லிய குரலில் கூறிய கிருத்திகா .. தன் மகனை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்...
லெட்சுமிக்கு தன் மகனைப் பறிகொடுக்கும் பொழுது கூட நாட்டுக்காக வீரமரணம் அடைந்தான் அடைந்தார் என நினைத்து சாந்தி அடைந்தவருக்கு.. மருமகள் இப்படி சிறு குழந்தையோடு தனிமையில் தவிப்பதை பார்க்க முடியாமல் நெஞ்சு துடித்தது.... ஆனால் சில தீர்வுகள் இல்லாத கேள்விகளுக்கு விடை எழுதி வைப்பது யாரோ?
பாஸ்கர் இறக்கும்பொழுது கிருத்திகா நிறைமாத கர்ப்பிணி.. அவன் பணியில் இருக்கும்போதே வீரமரணமடைந்ததால் அவனுடைய வேலை அவன் வீட்டை சார்தவர்களுக்கு கொடுக்கப்படும்..அதன்படி கிருத்திகாவின் படிப்புக்கு ஏற்றதாக எஸ்பி ஆபிசில் ரைட்டர் வேலை கொடுக்கப்பட்டது...
கிருத்திகா வீட்டில் 2 அண்ணன், ஒரு தம்பி இவள் மூன்றாவதாகப் பிறந்தவள்.. இவளுக்கு கைகொடுக்க அங்குள்ளவர்களுக்கு நேரம் இல்லை என்பதை விட இயலவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை... அவளும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கிடைத்த இந்த வேலையை வைத்துக்கொண்டு தன் மாமியாரோடு குவாட்ரஸ் வந்து தங்கிகொண்டாள் .. அளவான சம்பளம் அமைதியான வாழ்க்கைதான்... அவள் எப்பொழுதும் ஆடம்பரம் விரும்பி கிடையாது அன்றிலிருந்து கிடைப்பதை வைத்து நிம்மதியாக வாழும் சராசரி பெண்தான் எனவே அவளுக்கு பணம் ஓர் குறையாக இருக்கவில்லை.. இருக்க போவதும் இல்லை....
காலை ஆறு மணிக்கு எழுந்து பழக்கப்பட்டவள் தன் கடமைகளை செய்து வைத்துவிட்டு பாலாவை எழுப்பி அவனுக்கு ஆகாரம் கொடுத்து... மகனை அழைத்து கொண்டு வெயில் ஏறுவதற்கு முன்பாக அவனை விளையாட வைத்துவிடலாம் என நினைத்து, பக்கத்தில் உள்ள பார்க் உள்ளே நுழைந்தாள்...
டிராக் சூட்டில் பல காவலர்கள் அங்கே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர்... கிருத்திகாவும் யாரையும் கண்ணெடுத்து பார்க்காமல் .. தன் மகனை சிறுவர்கள் விளையாடும் பகுதிக்கு அழைத்துச் சென்று ..மற்ற சிறுவர்களுடன் விளையாட வைத்துவிட்டு.. ஒரு கல் இருக்கையில் அமர்ந்து , தான் கொண்டு வந்திருந்த காகிதங்களை எடுத்து சிறு சிறு ஓவியங்கள் வரைய ஆரம்பித்தாள் .... அவள் தனிமையை போக்குவதில் ஓவியங்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு... ஏதாவது வித்தியாசமாக அவள் கண்ணில் பட்டால் அதை அப்படியே தத்ரூபமாக வரையும் அபாரத் தாலந்து அவளுக்கு உண்டு...
ஒரு கோழி தன் குஞ்சை றெக்கை மறைவில் வைத்திருந்ததை கண்டவள் தாய்மை தலைதூக்கிட அதையே வரைய ஆரம்பித்தாள்...வரைந்து விட்டு
பாலா என மகன் விளையாண்ட இடத்தை நோக்கிட அவன் இருந்த இடம் வெறுமையாக இருந்தது பதறி போன கிருத்திகா அத்தனையும் அப்படியே போட்டுவிட்டு....
பாலாஆஆஆ...
பாலாஆஆஆஆ என சததமிட்டு மகனை அழைத்தபடி தேடி ஓட ஆரம்பித்தாள்...
எங்கையும் இல்லை கடவுளே உன்னையும் தொலைச்சிட்டேனா என குமுறி வந்த அழுகையை அடைக்க முடியாது மரத்தில் சாய்ந்து நிற்க அந்த பக்கம் பாலாவின் குரல்....
சார் உங்கள நான் எப்படி கூப்பிட...
குட்டிக்கு என்ன எப்படி கூப்பிட ஆசையோ அப்படி கூப்பிடு... என்ற ஆணின் குரலில் கிருத்திகா எட்டி பார்த்தாள்...
அன்பு மடியில் விளையாண்ட அழுக்கோடு பாலா கையில் அவன் வாங்கி கொடுத்த சாக்லெட்டை சுவைத்தப்படி கதை அளந்து கொண்டிருந்தான்....
ம்ம் அப்போ மாமா சொல்லவா... இல்லை இல்லை ஹீரோ சொல்றேன் நீங்க தான ஹீரோ மாதிரி வந்து என்ன காப்பாத்துனீங்க.. அதனால ஹீரோ ...
ஹாஹா அப்படியா சரி வச்சிக்க.. என்று அவன் உதட்டில் வடிந்த சாக்லெட்டை தன் கர்சீப் எடுத்து துடைத்து விட்டவன்... கனிவாக அவன் உண்ணும் அழகை ரசித்தபடி இருந்தான்....
கிருத்திகா தன் மகன் கிடைத்து விட்டான் என சந்தோஷத்தில் ஓடி போய்.
பாலா ஆஆஆ என்று கையை விரித்தபடி போகவும்....
அம்மா என பாலா ஓடி போய் அவளிடம் தஞ்சம் அடைந்து கொள்ளவும்... அவன் கண்கள் கனிவு போய் கணல் வந்தது...
பிள்ளையை கூட்டிட்டு வந்தா பத்தாது அவன பத்திரமா பார்துக்கணும்.. பந்தை எடுக்க ரோட்டுக்கு போயிட்டான் நல்லவேளை நான் பார்த்தேன்.. படிச்சவதான அறிவு இல்லை... இனி கவனமாக பார்த்துக்க என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் எள்ளாக பொறிந்து தள்ளிவிட்டு ...பாலா தலையை தடவா கொடுத்துவிட்டு நடக்க ஆரம்பித்தான்...அவள் விக்கித்து போய் அப்படியே நின்றாள்... பாலா நடந்து போகும் அன்புவை சத்தமிட்டு அழைத்து ..
ஹீரோ நாளைக்கு வருவீங்களா?
வருணுமா ஜூனியர்...
ஆமா ஹீரோ..வரும் போது இதே போல சாக்லெட், அப்புறம் சோட்டா பீம் பொம்மை வாங்கிட்டு வாங்க...
அவ்வளவு தானே ஜூனியர் கேட்டா நோ அப்பில் வாங்கிட்டு வர்றேன் என புன்னகை முகமாக அவனிடம் குளிர் நிலவாக பேசியவன் அவளை சுடும் சூரியனாக எரித்து பார்த்துவிட்டு போனான்..
கானலாக பாலா தகப்பன் கனவு கலைந்து போயிருக்க... உருவம் கொடுக்க வந்தானோ இந்த காவலன்.....
3
அன்புவின் கோப வார்த்தைகளும் கணலை கக்கிய விழிகளும் கிருத்திகாவிற்கு நன்றாகவே தெரிந்தது..
தன்மேல் தவறுதானே குழந்தையை கவனிக்காமல் இருந்த மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டவள்.. மூன்றாமவன் நம்மை எச்சரிக்கும் மாதிரி நாம் நடந்து கொண்டோமே என்று வெட்கினாள்..
என்னதான் பெரிய அதிகாரியாக இருந்தாலும் இப்படியா பப்ளிக்ல திட்டுறது.. தப்பு பண்றது மனுஷன் இயல்புதானே.. நல்லவேளை யாரும் எங்களை கவனிக்கல.. இல்ல என்ன ஏதுன்னு ஒரு கூட்டமே கூடி நமக்கு உதவி செய்றேன்னு உபத்திரவம் பண்ண வந்திருப்பாங்க.. இனிமே ஜாக்கிரதையா இருக்கணும்... அப்பா என்ன மாதிரி பாக்குறார்.. பார்வையிலேயே சுட்டெரிச்சிடுவார் போலிருக்கு .... பாலா அவன் கொடுத்த சாக்லெட்டை சுவைத்து கொண்டிருக்கவும் மகன் பக்கம் சிந்தனையை மாற்றினாள்...
பாலா இது என்ன புது பழக்கம்? யாரு எது வாங்கி கொடுத்தாலும் இப்படி தான் வாங்கி சாப்பிடுவியா?
அம்மா அது யாரோ கிடையாது .. என்னோட ஹீரோ?
ஹீரோவா...
ஆமா .. பெரிய லாரி வந்துச்சா.. அது என்மேல மோத வேகமா பக்கத்துல வந்துச்சு.. அப்போ சூப்பர்ஹீரோ மாதிரி அவர் வண்டி மேலே ஏறி குதிச்சி வந்து என்னை அப்படியே தூக்கிக்கிட்டார்... அவர்தான் என்னை காப்பாத்துனார் தெரியுமா ... படம் பார்த்து கதை சொல்வது போல தன் மகன் கண்களை விரித்து நீள்விழிகள் விரிக்க... குட்டி விரல்களை ஆட்டி ஆட்டி அவன் சொல்வதை பார்க்க ஒரு நாள் போதுமா?
அப்படியா அப்போ நாளைக்கே அந்த ஆங்கிள் வரும் போது தேங்க்ஸ் சொல்லிடு..
ம்ம் சரி மம்மி...
குட், அதேபோல அவர்கிட்ட அது வேணும் இது வேணும்னு கேட்கக்கூடாது .. அது தப்பு சரியா.. தன் மகனுக்கு நன்னடத்தை விதி தாயாக சொல்லி கொடுத்தாள் ஆனால் அவனோ..
மம்மி உங்களுக்கு ஒன்றுமே தெரியாது.. ஹீரோ என்ன சொன்னார் தெரியுமா? இனிமே உனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்ட தயங்காம கேளு.. நான் உனக்கு வாங்கித் தரேன்னு சொன்னார்....
நீ அவர் சொன்னா கேட்ப அம்மா சொன்னா கேட்க மாட்டியா ?
இன்னொன்னும் சொன்னார் .. உங்க அம்மா வாங்க கூடாதுன்னு சொன்னாலும்.. நான் என் ஹீரோகிட்டதானே கேக்குறேன்.. உங்களுக்கு என்ன வந்ததுன்னு கேளுன்னு சொல்ல சொன்னார் .. பார்த்தீர்களா அவருக்கு உங்கள பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு ... தன் தாயை குற்றப்பத்திரிக்கை வாசித்தான்... அவர் ரொம்ப நல்லவர் நீங்கதான் பேட் என் ஹீரோ பத்தி தப்பா பேசக்கூடாது சரியா என்று கோபத்தில் சிடுசிடுவென பாலா நின்றான்..
ஒரே நாள்ல அவர் கோபத்தை என் மகனுக்கு சொல்லிக் கொடுத்துட்டுப் போயிட்டாரு.. அவர் இருக்கிற பக்கமே இவன இனி தலை வைச்சி படுக்க வைக்க கூடாது .. எனக்கு எதிரா என் மகன திரும்பிடுவார் .. அன்புவுக்கு சில பல நல்ல வார்த்தைகளில் அர்ச்சனை செய்து கொண்டு மகனைக் கூட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்...
ஆனால் அன்புவோ பாலா கேட்ட பொருட்களை தேடி கடை கடையாக அலைந்தான்...
சோட்டா பீம் இருக்கா என காவல் உடையில் அவன் கடை கடையாக புலன்விசாரணை பண்ணி இறுதியாக ஒன்றை வாங்கியும் விட்டான்...
இதுக்கு எவ்வளவு அக்கப்போர் நாளைக்கு எப்போ வரும் ஜூனியர் என்ன சொல்லுவான்.. அவன் முகத்தில் சிரிப்பை காண அத்துனை மகிழ்ச்சி அன்புவுக்கு.....
அன்பு வேலை முடிந்து தன் வீட்டுக்குள் போகவும்... ஹாலில் தன் தாய் தகப்பன் அமர்ந்து பேசி கொண்டிருக்கவும் அவர்களை தாண்டி படியில் புது உற்சாகத்தில் ஏறி போன அன்புவை கண்டவர்கள்...
என்னங்க ஒரு நாள் இல்லாத திருநாளா சிரிச்ச முகத்தோட இன்னைக்கு வேலையிலிருந்து வந்திருக்கான் ...
அதானே அதிசயமாதான் இருக்கு.. எப்போதுமே வரும்போதே முகத்துல கால் கிலோ மிளகாயை அரைச்சி அப்பிக்கிட்டு தானே வருவார் துரை... புதுசா இருக்கு....
ஆமாங்க ஆனா அழகா இருக்கு அவன் முகத்துல சிரிப்பு தன் மகனின் பிரகாசமான முகம் கண்டு அன்புவின் தாய் பத்மா நிம்மதி பட்டு கொண்டார்..அதில் சிறிய நிம்மதியும் , சந்தோஷமும் கூடவே இருந்தது... அன்பு முகத்தை இப்படி பார்க்க, எத்தனை நாள் ஆசை அவருக்கு..
நான் சொன்னேன்தானே ஊர்மாறி வந்தா... ஏதாவது நல்லது நடக்கும்னு பார்த்தியா.. நான் சொன்ன மாதிரி இந்த ஊருக்கு வந்ததும் எல்லாம் நல்லதாகவே நடக்குது..
ம்ம் அதே மாதிரி சீக்கிரம் அவன் கல்யாணத்துக்கும் சம்மதம் சொல்லிட்டா நாம அப்படியே கோவில் குளம்னு போயிட வேண்டியதுதான்.. ஆண்டவன்தான் நல்ல வழியை காட்டு காட்டணும் என்ற ஆண்டவன் மேல் அத்தனை பாரத்தையும் இருவரும் போட்டனர்....
மகனின் எண்ணக்கிடங்கு இவர்களுக்கு எப்படி தெரிய போகிறது ஆணடவன் போட்டு வைத்த கணக்கை மாற்றி வைக்க இவ்வுலகில் ஆள் உண்டோ? நாம் ஒன்றாக நினைக்க தெய்வம் வேறாகத்தான் நினைக்கும் என்பது இந்த தம்பதியருக்கு புரிவது எப்போதோ?
காலை எப்போது விடியும் என்று இங்கே காவலன் இரவெல்லாம் விழித்திருக்க.. அவன் மட்டுமா விழித்திருந்தான் இல்லையே... அங்கே பாலாவும் தூங்காமல் இரவெல்லாம் தன் தாயை போட்டு உபத்திரவ படுத்துவிட்டான்..
அம்மா நாளைக்கு காலையில என்ன சீக்கிரமே அனுப்பிவிடுங்க.. ஹீரோ வருவார் நான் சொன்னதெல்லாம் கண்டிப்பா வாங்கிட்டு வருவார்...
பாலா அவர் சும்மா விளையாட்டுக்கு சொல்லிட்டு போயிருப்பார்.. நீ ரொம்ப ஆசைப்பட்டு ஏமாந்து போகாத ... அவர் ரொம்ப பெரிய ஆபிஸர் டெய்லி உன்ன வந்து பார்க்க அவருக்கு நேரம் இருக்காது... எதையும் யோசிக்காம படுத்து தூங்கு என சொல்லி சொல்லி ஓய்ந்து போய் விட்டாள் கிருத்திகா...
மம்மி அவர் வருவார்.. நான் கேட்டது வாங்கிட்டு வருவார்.. என்ன காலைல எழுப்பி மட்டும் விடுங்க பெரிய மனிதனாக பேசிவிட்டு எப்போது விடியும் என காத்திருந்தான்..
காலையும் வந்தது தாயை இருக்க விடாது தொல்லை செய்ய ஆரம்பித்து விட்டான்... அவளோ வேலைக்கு புறப்பட்டு கொண்டிருந்தவள் சமையலில் பிஸியாக இருக்கவும் பார்த்துக் கொண்டிருந்த லெட்சுமி ..
நீ சமையலை முடித்துவிட்டு வேலைக்கு தயாராகு நான் கூட்டிட்டு போயி கொஞ்ச நேரம் விளையாட விட்டு அழைச்சிட்டு வர்றேன்..
அய்யோ அத்தை அதெல்லாம் வேண்டாம் இவன் வேண்டாத வேலை பார்க்க போறான் இவன காப்பாற்றினாரே ஐபிஏஸ் சார்... அவர டெய்லியும் வாங்கன்னு இவன் கூப்பிட்டு இருக்கான்.. அவருக்கு இவன டெய்லி பார்க்க வர்றதா வேலை.. அவருக்கு இருக்கு ஆயிரம் வேலை வரிசை கட்டி.. அதுல இவனையா ஞாபகம் வைத்திருக்க போறார்... எவ்வளவு சொன்னாலும் அவனுக்குப் புரியவே இல்ல.. இன்னைக்கு வருவார், எனக்கு சோட்டா பீம் வாங்கி தருவார்னு ராத்திரியிலயிருந்து என்னையும் தூங்கவிடாம அவனும் தூங்காம படுத்துறான் ..
சின்ன குழந்தைக்கு என்ன தெரியும்..அவன கொடு இன்றைக்கு அவன கூட்டிட்டு போய் விட்டுட்டு.. அவர் வரலன்னா ரெண்டு நாள் காத்து இருந்துட்டு மறந்து போக போறான்....
அதெல்லாம் வேணாம் அத்தை.
நீ போக விடல உன்மேல தான் கோபப்படுவான்..
சரி கூட்டிட்டு போயிட்டு வாங்க... ரொமப் அடமாபோச்சி பாலா உனக்கு .. பாத்து பத்திரமா போங்க என்று இருவரையும் அனுப்பி வைத்துவிட்டு அவள் வேலைக்கு கிளம்ப தயாரானாள்.....
இருவரும் உள்ளே நுழைய அவர்களுக்கு முன்பே காத்திருந்தான் அன்பு ஆனால் லெட்சுமி திகைத்து போய் அவனை பார்க்கவும் குழந்தைக்கு வாங்கிய பொருளை கொடுத்து விளையாட அனுப்பிய அன்பு லெட்சுமியிடம் வந்து காரசாரமாக ஏதோ பேசிட....
தம்பி இது சரி வருமா....
வரணும் வந்தே ஆகணும்..நான் பார்த்துக்கிறேன் உங்களுக்கு சம்மதம் தானே....
எனக்கு பரிபூரண சம்மதம் தம்பி அவருக்கு பேச வார்த்தை வராது அடைத்தது கண்ணில் கண்ணீர் கசிய அன்புவின் கரத்தை பிடித்து கொண்டார்...
வறண்ட பாலைவனத்தில் அன்பு நீரூற்று போல லெட்சுமி கண்ணுக்கு தெரிந்தான்....
பாலைவனத்தில் பூப்பூக்கும் தருணம் எப்போதோ?
4
பாலா விளையாண்டு விட்டு ஓடிவந்து அன்பு கால்களை கட்டி கொண்டு...
ஹீரோ இந்த பொம்மை யாருக்கிட்டையுமே இல்லை எல்லாரும் இது உங்க அப்பா வாங்கி தந்ததான்னு வாங்கி வாங்கி பார்த்தாங்க தெரியுமா சிறுபிள்ளை சிரிப்பில் இறைவனை கண்டான் ...
அப்படியா நீ என்ன சொன்ன என தூக்கி வைத்து கொண்டான்...
என் ஹீரோ வாங்கித் தந்தார்னு சொன்னேன்....
ஓஹோ சரி ஜூனியர் இனி டெய்லி நாம பார்க்கலாம் உன் வீட்டு பக்கம் தான் என் வீடு கூட்டிட்டு போறேன் வர்றியா ...
இல்லை தம்பி கிருத்திகாவுக்கு தெரிஞ்சா...
அவ அங்க வேலையா இருப்பா அப்படியே தெரிஞ்சாலும் நான் பாரத்துக்கிறேன் அம்மா...
ம்ம் சரிங்க தம்பி....
நீங்க பொடி நடையா போங்க நானும் அவனும் மார்கெட் போயிட்டு வர்றோம்...
லெட்சுமிக்கு இது எங்க போய் முடிய போகுதோ கடவுளே என கொஞ்சம் பீதி இருக்கத்தான் செய்தது.. பாலாவை தூக்கி போட்டு விளையாண்ட அன்பு அவன் கிளுக்கி சிரிக்கவும் மறுபடி மறுபடி தூக்கி போட சொல்லி அடம்பிடித்து காவலனை அவன் கைப்பாவை ஆக்கினான் பாசம் கொண்டு....தூரத்தில் நடந்து போன அன்புவையும் , பாலாவையும் பார்க்க கண்கள் நிறைந்து போனது...
எல்லாம் நல்லா நடக்கணும் ஒரு வழியை காட்டு என வேண்டுகோள் வைத்து விட்டு வீட்டை நோக்கி சென்றார்...
காடு மேடெல்லாம் அவனோடு அலைந்து திரிந்து விட்டு அன்பு தோளில் பாலா தூங்கி விட...அவன் தலையை கோதி விட்டவன் கண்களில் வைரக்கல் போல் ஒரு தூளி ஈரம் மின்னியது.. கல்லிலும் ஈரத்தை கசிய செய்ய உண்மை அன்புக்கு மட்டும் தானே முடியும்.. அவன் கள்ளமில்லா அன்பும் ,சிரிப்பும் அவனுக்கு மனதை வாட்டி வதைத்த ரணத்தை மயிலிறகு கொண்டு நீவி விட்டது போல் இதத்தை கொடுத்தது....
இன்று இரவு நேர பணிக்கு தான் போக வேண்டும் எனவே நாள் முழுவதும் அவனோடு இருக்க ஆசை கொண்டு பாலாவை தூக்கி கொண்டு தன் வீட்டுக்கு போனான்.. தன் மகன் ஒரு குழந்தையோடு வருவதை எந்த பெற்றோர்தான் அமைதியாக பார்க்க முடியும் சற்று தயங்கிய பத்மா...
அன்பு யாருப்பா இது....
என் குட்டி ப்ரெண்ட் என்று மெல்லிய புன்னகை ததும்பிய முகத்தோடு கூறியவன் தன் அறைக்கு செல்ல படியில் கால் வைக்க..
அது சரிப்பா இவன் அப்பா அம்மா எங்க? ஏன் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்க...
ஸ்ஸ் அம்மா குழந்தை தூங்கிறான் முழிக்க வச்சிடாதீங்க.. முடிஞ்சா அவனுக்கு திக்கா பால் கலக்கி ப்ளாஸ்கில வைங்க.. நோ நோ நானே போட்டுக்கிறேன் நீங்க சூடா கொடுத்துட்டா போச்சி.. மதியம் பருப்பு கடையல் வைங்க வேறு எதுவும் பாலா சாப்பிட மாட்டான் என்று கட்டளை போல கூறி முடித்து விட்டு தன் அறையில் கொண்டு போய் பாலாவை படுக்கையில் படுக்க வைத்தவன் அவனும் படுத்து கொண்டான்.... இத்தனை நாள் வராது பூச்சாண்டி காட்டிய நித்திரை தானாக பாலா அருகில் வந்தது.... அவனும் கண்ணயர்ந்து விட்டான்... அன்புவுக்கு ஜூஸ் கலக்கி கொணடு வந்த பத்மா மெல்ல கதவை திறந்ததவர் கண்டது அன்பு மேல் ஏறி படுத்திருந்த பாலாவையும், அன்பு அவனை கீழே விழாமல் பிடித்திருந்ததைதான்....
யாரு இந்த பையன் வீடு வரைக்கும் கூட்டிட்டு வர்ற அளவுக்கு நெருக்கமா... இப்படி இதுவரை யாருக்கிட்டையுமே நெருங்கி பழகமாட்டானே மண்டையை வண்டாக குடைந்த கேள்விகளுக்கு மகனிடம் பதில் எப்படி கேட்க என தெரியாமல் மீண்டும் கீழே சென்று விட்டார்.....
நாள் முழுவதும் அன்புவும் குழந்தையாகி போனான் அவனை தலேமேல் தூக்கி வைத்து கொண்டு பவனி வந்தான் புல்லட்டில் முன்னால் இருக்க வைத்து கடைகளில் நகர்வலம் வந்தார்கள் இருவரும்... முகம் கொள்ள புன்னையோடு அம்பு பைக்கில் பாலா அமர்ந்திருக்க... அவன் பைக் முன்னால் வந்து தன் ஸ்கூட்டை நிப்பாட்டினாள் கிருத்திகா...அவன் அலட்டிகொள்ளாதவனா..
என்ன என்றான்...அவளோ தன் மகனிடம் சாடினார்...
நேத்தே உங்கிட்ட இந்த பழக்கம் கூடாதுன்னு சொன்னேன் தான பாலா யாருக்கேட்டு இவர் கூட வந்த ஹாங் உனக்கு செல்லம் கொடுத்தது தப்பா போச்சி வா வீட்டுக்கு என மகனை தூக்க போக..அவன் தாயின் அதட்டலில் வீறிட்டு அழ ஆரம்பிக்க..
இப்போ எதுக்கு பிள்ளையை திட்டுற கீதா.. பாவம் அழுறான் பாரு...
உங்களுக்கு என்ன சார் வந்தது என் மகன் மேல உங்களுக்கு என்ன அக்கறை இதுவே கடைசி தடவையா இருக்கட்டும் இனி என் மகன் மனசை கலைக்க பார்த்தீங்க நடக்கிறதே வேற.. ஆல்ஸ்டன் நீங்க எனக்கு தலைமை இங்க இல்லை எங்களுக்கு இடையில வர நீங்க யாரு சார் என்று ஒருவிரல் நீட்டி அன்புவை எச்சரிக்கை செய்ய...
பேசி முடிச்சிட்டியா.. வீட்ல போய் சோடா குடி தொண்டை கூலாகும் அன்ட் இன்னொரு விஷயம் இனி டெய்லியும் என் ப்ரீ டைம் பாலா கூடத்தான் முடிஞ்சதை செஞ்சிக்க இப்போ வழியை விடு அடி தொண்டையில் சீறியவன் பாலாவை வாங்கி மீண்டும் முன்னால் அமர்த்தி கொண்டு ஊர் சுற்ற கிளம்பி விட்டனர்... போகும் அன்புவை எப்படி தடுக்க என்பது கூட தெரியாமல் அப்படியே நின்று கொண்டிருந்தாள்....
நான் பேசிட்டு இருக்கேன் சொல்ல சொல்ல கேட்காம கூட்டிட்டு போறார் என்ன பார்த்தா பைத்தியக்காரி போல இருக்கா எல்லாம் இந்த பாலாவால வந்ததது பசை போட்டு ஒட்டிகிட்டான் அம்மான்னு முகத்தை எட்டி பார்கிறானா கூப்பிட்டதும் கங்காரு குட்டி போல தொங்கிட்டு போறான்... நடுத்தெருவில் புலம்ப விட்டுட்டாங்களே என புலம்பி புலமபி வீடு போய் சேர்ந்தவள் கோவத்தில் கதவை திறக்க அன்பு சோபாவில் அமர்ந்து லட்சுமியிடம் பேசி கொண்டிருந்தான்...
என்ன நடக்குது இங்க குழம்பி போனாள்... அவர்களை தாண்டி தன் அறைக்கு போக போனவளை தடுத்தது அன்புவின் குரல்...
அவன் தூங்குறான் தூங்கட்டும் உன் வெண்கல தொண்டையை திறந்து பிள்ளையை எழுப்பி விட்டுறாதே...
சார் இது என் வீடு நான் எப்படி பேசணும் என்ன பேசணும்னு நீங்க சொல்லி தர வேண்டிய அவசியம் இல்லை... உயர் அதிகாரின்னு மரியாதை கொடுத்தா நீங்க கொஞ்சம் ஓவரா போறது போல இருக்கு... இனிமே இப்படி எங்க வீட்டுக்கு வராதீங்க பார்க்கிறவங்க என்ன தப்பா நினைப்பாங்க நான் சொல்ல வர்றது உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன் ப்ளீஸ் போங்க என வாசல் நோக்கி கைகாட்ட லெட்சுமி பதறி போய்...
அம்மாடி..
நீங்க போங்க அம்மா நான் பேசிக்கிறேன் என அவனை உள்ளே அனுப்பிய அன்பு..அவன் நீட்டிய கையை மடக்கி வைத்துவிட்டு....
பேஸ்மென்ட் ரொம்ப வீக்கா இருக்கு பாரு கால் ஆடுது அடுத்த வாட்டி சண்டை போடும் போது கால் ஆடாம பாத்துக்க என கண்ணை சிமிட்டிவன்..
பாலா சாப்பிட்டான் நீயும் சாப்பிட்டுட்டு சமத்தா தூங்கு எனக்கு நைட் ட்யூட்டி இருக்கு காலையில வந்து உங்கள பார்க்கிறேன் என கதவு வரை போனவன்....
வெள்ளை காகிதமாதான் இருக்கணும்னு இல்லை அதுல ஓவியம் வரைஞ்சி பாரு முழுமை அடையும் என விசில் அடுத்து கொண்டு சென்றவன் பேச்சு நடத்தை புரியாது அரண்டு நின்றாள்......
அவள் வெள்ளை காகிதத்தில் ஓவியமாக அவன் வருவானா?
5
அன்புவை இதற்கு மேல் எப்படி கடிந்து பேசிட என தெரியாது அவனுக்கு வீட்டுக்குள் இடம் கொடுத்த தன் அத்தையை தேடி போனாள்..
அத்தை அவர ஏன் வீட்டுகுள்ள விட்டிங்க ..அககம் பக்கத்துல பார்த்தா என்ன நினைப்பாங்க....
நான் நெஞ்சு பிடிச்சிட்டு சாயும் போது நீ சொன்ன அக்கம் பக்கம் சும்மாதான் போச்சி இந்த தம்பிதான் ஓடி வந்து டாகக்டரை கூட்டிட்டு வந்து மருத்துவம் பண்ணினாரு அவர போய் வெளிய போன்னு எப்படிம்மா சொலறது..
ஐயோ அத்தை என்ன ஆச்சி..பதறி போனாள்
ஒனனும் இல்லை வெயில்ல வந்ததுல கொஞசம் தலைசுற்றி விழுந்திட்டேன் தம்பிதான் பார்த்து கொண்டு வந்து வீட்டுல விட்டுட்டு பாலாவ நான் பாரத்துக்கிறேன் நீங்க ரெஸ்ட் எடுங்கன்னு தூக்கிட்டு போனார் அந்த பையன போய் கண்டமேனிக்கு பேசுறியே கிருத்திக்கா...
ஓஓஓஓ எனக்கு எப்படி தெரியும் அத்தை ஆனாலும் அவருக்கு வாய் ஓவர்தான் ...
என்னம்மா பேசினார்...
ஒன்னும் இல்லை இனி வந்தா வெளியேவே விட்டு பேசுங்க பொல்லாத உலகம் ஏதாவது பேசிட போகுது...உடம்ப கவனமா பார்த்துக்கோங்க என்று அறைக்குள் போய் படுத்தளுக்கு ...
ஹெல்ப் பண்ணியிருக்கார் அது தெரியாம கண்டபடி பேசிட்டேன் கண்டதையும் பேசியவர் இப்படி ஆகி போச்சின்னு சொன்னா என்னவாம்.. நாளைக்கே சாரி கேட்கணும் என மனதில் நினைத்து கொண்டு மகனிடம் படுக்க போக அவனோ இன்னும் ஹீரோ மயக்கத்திலிருந்து தெளியவில்லை போலும்...
ஹீரோ அந்த வண்டியை முந்துங்க இன்னும் பாஸ்ட் போங்க டூர் டூர்என வாயில் பைக் ஓட்டி கொண்டிருக்க... சிரித்து கொண்டே அவனை அணைத்து கொண்டு கண் மூடினாள்...
காலையில் எஸ்பி ஆபீஸ் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்க.. அன்பு உள்ளே நுழைந்தான் கிருத்திகா எழும்பி அவனுக்கு வணக்கம் வைக்க கண்டுகொளளாது உள்ளே போனவன்... வேலையில் முழ்கிவிட...
இப்போ போனா திட்டுவாரா ஒரு சாரிதான கேட்டுட்டு ஓடி வந்திடலாமா.. என அவன் கண்ணாடி அறையை எட்டி எட்டி பார்த்து கொண்டிருந்தாள்...
மேடம் அன்பு சார் நாதன் பைல் எடுத்துட்டு வர சொன்னார் எதுவோ குறிக்கணும் போல நின்னு அதையும் நோட் பண்ணிட்டு வந்திடுங்க..
சரிங்க சார் என தன் காட்டன் சேலையில் இஞ்ச் இடைவெளி கூட தெரியாது வாழை விசிறி போல போட்டிருந்த மடிப்பை சரி செய்து கொண்டு அறையை தட்டி அனுமதி வாங்கிவிட்டு உள்ளே போனவள்...
சார் நீங்க கேட்ட நாதன் பைல் சார்...
அதுல அக்ஹூஸ்ட் டிடெய்ல் பார்த்து சொல்லுங்க அவளே இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சம் வேலையை பழகி கொண்டிருக்கிறாள்.. கொஞ்சம் மெதுவாகத்தான் எல்லாம் செய்வாள் அவன் அவசரத்துக்கு கைகள் தந்தியடிகக தாளை புரட்டி புரட்டி கிருத்திகா அவன் கேட்டதை தேட ஆரம்பித்தாள்...
விட்ஞ்சிடும் போலயே பேச்சி மட்டும் அவ்வளவு பேசுற ஒரு சின்ன டிரெய்ல் எடுக்க முடியல கொண்டா என பிடிங்காத குறையாக பைல்லை வாங்கி நோட் செய்தவன்...
சொல்றத நோட் பண்ணு..
எஸ் சார் என நாட்டையும் பேனாவையும் எடுத்து கொண்டு அன்பு சொல்ல சொல்ல எழுத ஆரம்பித்தாள்...உதடு அதன் வேலையை செய்ய கண்களோ அவளைதான் இமை முடியாது பார்த்து கொண்டிருந்தது...
காற்றில் அவள் கற்றை கார்குழல் கூந்தல் அசைந்து நதியின் ஓரம் உள்ள புற்களை போல சரசமாட.. ஒரு தூளி வியர்வை அவள் நெற்றியில் விழவா வேண்டாமா என நர்த்தனம் ஆடிட.. வெண்டை பிஞ்சு விரல்கள் வெள்ளை தாளில் நாட்டியம் பழகிட அவன் கண்கள் கவிஞனாக கவி பாடியது... ஏசி ரிமோர்டடை எடுத்து ஆன் செய்து மிதமான வேகத்தில் வைக்க... அவள் மீது பட்டு வந்த கூதல் காற்று அன்பு நாசியை அடைய ஆழ் மூச்செடுத்து அதை தன் நுரையீரலில் நிறைத்தான்.....
சார் முடிச்சிட்டேன்..
ம்ம் டைப் பண்ணி கொண்டு வாங்க...
ஓகே சார்...என்றவள் தயங்கி தயங்கி...
சார்...
என்ன எயி டவுட்...
அது சாரி சார்...எங்க அத்தையை நீங்கதான் காப்பாத்தினதா சொன்னாங்க சாரி அது தெரியாம கோவப்பட்டுட்டேன்...
போயு வேலையை பாருங்க அக்கம் பக்கத்துல பார்த்தா தப்பா நினைக்க போறாங்க என்று அவள் டயலாக்கை கூறவும் முகம் காற்றை இழந்த பலூன் போல் போய்விட்டது...
சிடுமூஞ்சி ராமசாமி எப்பவும் நம்மை கிட்ட மூஞ்சைதான் காட்டுறார் என்ன பார்த்தா இவருக்கு எப்படிதான் இருக்குமோ தெரியலை....
என்ன திட்டி முடிச்சாச்சின்னா போய் வேலேயை பாரு..
சரி சார் சாரி சார் என கண்களை உருட்டியவள்.. நோட்டை தூக்கி கொண்டு வெளியே ஓட்டமும் நடையுமாக போனாள்.... அவள் கையிலிருந்து விழுந்த கர்ச்சீப்பை குனிந்து எடுத்தவன்... அதை மூக்கில் வைத்து நுகர்ந்தவன்..
பாலாகிட்டையும் இதே வாசம் அடிக்கும் அம்மாவ போல பையன் போல என சிரித்து கொண்டவன் அதை பத்திரமாக எடுத்து தன் கால்சட்டை பையினுள் வைத்தான்...
காவலன் கள்வன் ஆனான்.....
கிருத்திக்காவுக்கு இரவு வேலை முடிய பத்து மணி தாண்டி விட்டது...அறக்க பறக்க ஓடி வந்து தன் பைக்கை ஸ்டார்ட் செய்ய அதுவோ அடம் பிடித்து நின்று கொண்டது...
கடவுளே இது என்ன சோதனை ஆட்டோ வேற இந்த டைம்ல வராதே நகத்தை கடித்தபடி அவள் பைக்கை மறுபடியும் ஸ்டார்ட் செய்து இயந்திரம் முன்பு தோற்று போய் நின்றாள் அப்போது அவளிடம் பைக் வந்து நிற்கவும் ஏறிட்டு பார்த்தாள் ஏஸ்ஐ ஒருவன் வழிந்து கொண்டு...
என்ன மேடம் பைக் ஓடலையா...
ஆமா சார் என குனிந்து கொண்டாள்...
வாங்களேன் கொண்டு போய் விடுறேன்....
இல்லைங்க சார் நானே போயிடுறேன்..
என்ன மேடம் பக்கத்து பக்கத்து வீட்டுல இருக்கோம் இந்த ஹெல்ப் கூட பண்ண மாட்டேனா சும்மா வாங்க...
இல்லை சார் நானே போயிடுவேன்...
அட வா ரொம்பதான் பண்ற உனக்கு பிடிக்காம வேற எதுவும் பண்ண மாட்டேன் வா என்று கிருத்திகா கையை பிடித்து இழுக்கவும் அழைகை பீறிட...
சார் விடுங்க விடுங்க என்று கையை உதறி கொண்டு விடுபட முயன்றாள்....
இங்க பாரு என்ன அட்ஜெஸ்ட் பண்ணி போனா உனக்கு நல்லது இல்லை உன் பேர எப்படி அசிங்கப்படுத்தி எங்கிட்ட வர வைக்கணும்னு தெரியும் வா என்று அவள் இடையை பற்ற போனவன் பல்டி அடித்து போய் விழுந்தான்..கிருத்திகா அழத விழியோடு எட்டி பார்க்க... அன்பு கையை உதறிபடி வந்தான்...
ராஸ்கல் பொறுக்கி வேலை பார்க்கிற கொன்றுவேன் .. என்று கீழே விழுந்து கிடந்தவன் நெஞ்சில் மிதித்து....
இனி அவளுக்கு தொல்லை எதாவது பண்ணின என்று விரல் நீட்டி எச்சரித்த அன்பு பார்வை சொன்ன உன்னை கொன்று விடுவேன் என்று...
சார் அந்த பொண்ணு தான் என்கிட்ட தப்பா நடந்திச்சு... என்று பழியை கிருத்திகா மீது போடவும்.... அன்பு பல்லை கடித்து கொண்டு அவன் முகத்தில் ஓங்கி குத்தியவன்...
உன்ன பத்தி இந்த டிபார்ட்மெண்டுக்கே தெரியும் எழும்பி போயிடு இல்லை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்றவன்.... அவன் எழும்பி ஓடிவிடவும் கிருத்திகாவை நோக்கி வந்தான்...
வா வந்து வண்டியில ஏறு என தன் ஜீப்பை எடுக்க...
இல்லை சார் நானே..
அதான் உன் தைரியத்தை பூரிச்சி போய் பார்த்தேனே அடச்சை செருப்பை கழட்டி விளாச தெரியல எங்கிட்ட மட்டும் தான் வீர ஆவேச பேச்செல்லாம்... அவள் விக்கி விக்கி அழுது விட்டாள் இவன் மட்டும் வராது போயிருந்தால் என்ன நடந்திருக்கும் என நினைக்கவே உடல் பதறியது...
ஏய் கீதா இப்ப எதுக்கு அழுற.. அவளை தொட்டு ஆதரவு கொடுக்கும் நெருக்கம் இல்லாது கைகளை இறுக்கி கொண்டான்....
கீதாஆஆஆ குரல் கரகரத்தது....
சார் எங்க போனாலும் வாழ விட மாட்டைக்கிறாங்க என்சதை மட்டும் தான் கண்ணுக்கு தெரியுமா சார் நான் விதவையா நிற்கும் போது கூட வருத்தப்படல சார் ஆனா இப்படி நாய்கள் முன்ன என்ன காப்பாத்திக்க ஓடும் போது சாக தோணுது சார் ஏனு சார் அவர் என்ன விட்டுட்டு போயிட்டாரு.... என கூறியவை அணைத்து கொண்டு..
கண்ணே கலங்காதே உன் கண்ணீர் துடைக்க நான் இருக்கிறேன்.. சகியே உன் பாரம் சுமக்க என் தோள் உண்டு... ரதியே உன் இன்னல் நீக்க என் கரம் உண்டு நான் உனக்காகவே வாழ்கிறேன் என சொல்லிவிட உதடு துடித்தது...
சரி சரி வா கொண்டு போயு விடுறேன் காலையில பைக்கை சரி பண்ணி கொண்டு யாரையாவது விட சொல்றேன்...
ஒரு ஆட்டோ பிடிச்சி கொடுங்க சார் போயிடுறேன்..
ஓஓ ஆட்டோ டிரைவரை நம்புவீங்க என்ன நம்ப மாட்டீங்க அப்படிதான மேடம்...
அது அது...
ப்ச் என போனை எடுத்து ஆட்டோவுக்கு போட போனான் ஆனால் கிருத்திகா போய் அவன் வண்டியில் பின் இருக்கையில் ஏறி கொள்ளவும் பெருமூச்சி விட்டவன்...
ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும் போலையே கண்ண கட்டுதே அன்பு... ப்பூ என காற்றை ஊதி கொண்டு போய் வண்டியை எடுத்தான்....
அன்புவுக்கு அவளோடு வாழ்க்கை பயணமும் சேர்ந்தே போக ஆசையோ?
6
காரில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த கிருத்திகா சத்தம் வெளியே வராமல் விசும்பிக் கொண்டே இருந்தாள் ..
இப்ப நீ எதுக்கு இவ்வளவு கண்ணீர் வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா... இப்படி நீ அழுதிக்கிட்டிருக்கிறதால நடந்தது எதுவும் மாற போறதில்ல .. இல்லை இதுக்கு முன்னாடி இப்படி அழுது எதையாவது சாதித்து இருக்கியா காரின் அமைதியை அவனின் அதட்டல் குரல் நிரப்பியது... அவனும் ஏறியதில் இருந்து கண்ணாடி வழியாக கிருத்திகாவை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறான் .. அவள் அழுதாள் அவளுக்கு வலிக்கிறதோ இல்லையோ? அவளுக்கு வலிக்கிறதே.. எப்படி சொல்வது அவன் நேசத்தை
எதுக்கு தான் சார் நீங்க அழ சொல்றீங்க.. உங்களுக்கு என்ன பாத்தா எப்படித்தான் இருக்குது எது பண்ணினாலும் குத்தம் கண்டு பிடிக்கிறீங்க....
என்ன கண்டுபிடிச்சேன் நீ சரியா செஞ்சா நான் ஏன் குற்றம் கண்டுபிடிக்க போறேன்
ஓஓ அப்போ நீங்க மட்டும் சரியா சார்...
நான் எதுல தப்பு செஞ்சதை கண்ட...
இதோ எல்லாரையும் மேடம் சொல்றீங்க .. என்ன விட சின்ன பொண்ண கூட மேடம்னு கூப்பிடுறீங்க.. என்ன மட்டும் வா போன்னு கூப்பிடுறீங்க கண்டமேனிக்கு பேசுறீங்க.. என்ன பார்த்தா உங்களுக்கு ஏதாச்சும் லூசு போல தெரியுதா மத்ததை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அவனிடம் சண்டைக்கு பாய்ந்தாள்... இதுதானே அவனுக்கு வேண்டும் இதழை வளைத்து சிரித்துக் கொண்டவன் ...
ஏன்னாஅவங்களுக்கு எல்லாம் மரியாதை கொடுக்கணும்னு தோணும்.. உன்ன பாத்தா எனக்கு மரியாதை கொடுக்கவே வரமாட்டேங்குது அது என்ன காரணமாக இருக்கும் கீதா
சார் என் பேரு கிருத்திகா நீங்க முதல்ல இருந்தே தப்பாவே கூப்பிடுறீங்க,
ஓஹோ, ஆனா எனக்கு அந்த காய் பெயர் எல்லாம் பிடிக்கல.. கீதாதான் நல்லா இருக்கு... ஈசியா வாய்க்குள்ளே நூழையிற மாதிரி.
ஈஸியான பேர் வேணும்னா கேரட், பீன்ஸ் , பட்டாணின்னுதான் வைக்கணும் என்றுவிட்டு ஜன்னல் வழியே வெளியே பார்க்க ஆரம்பித்தாள்...
இவ்வளவு நாளும் அமைதியா இருந்த பூனை ஒன்னு நானும் புலிதான்னு வெளிய வருது போலிருக்கு... நீ பூனையா புலியா எந்தன் சற்று சாய்வாக அவளைத் திரும்பிப் பார்த்து கேட்டான்
நான் பூனையும் இல்லை.. புலியும் இல்லை சாதாரண பொண்ணுதான்..
அப்போ சரி
எல்லாம் உங்களாலதான் சார்...
என்னாலையா நான் என்ன பண்ணினேன்..
இதுக்கு முன்னாடி இருந்த ஆபீஸர் டான்னு ஐஞ்சு மணிக்கு அனுப்பிவிடுவார்.. நீங்க அந்த பைல் கொண்டு வா, இந்த பைலை கொண்டு வான்னு ஒன்பது மணி வரைக்கும் வேலை வாங்கிட்டீங்க அதனாலதான் அந்த நாய் என்கிட்ட வந்து தப்பா நடந்துகிட்டான்.. நீங்க மட்டும் சரியா அனுப்பி விட்டிருந்தீங்கன்னா இந்த அசிங்கமே நடந்திருக்காது...
ஹலோ என்னைக்காவது ஒரு நாள் முன்ன பின்ன ஆகத்தான் செய்யும்... நீதான் ஃபுல்லா சும்மாதான இருக்க.. ஒரு நாள் வேலை செஞ்சா ஒன்னும் குறைஞ்சி போக மாட்ட..
நீங்க பாத்தீங்களா சார்.. நான் வேலை செய்யாம சும்மா இருந்தத.. காலைல 8 மணிக்கு வந்தா 5 மணி வரைக்கும் நிமிர முடியாம டைப்பிங் இருக்குது .. சாப்பிட கூட எனக்கு நேரம் இல்ல தெரியுமா?
அப்ப யாரு உன்ன இந்த வேலைக்கு வர சொன்னா வீட்ல இருக்க வேண்டியதுதானே..
ரொம்ப சந்தோஷம் சார் வீட்டிலயிருந்தா சாப்பாட்டுக்கு என்ன பண்றது.. எனக்கும் ஒருவாரம் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்க ஆசைதான்.. ஆனா எங்க முடியுது... ஒரு நாள் லீவ் கூட தரமாட்டைக்கிறாங்க தெரியுமா.... இதுல என் மகன் வேற இப்பவெல்லாம் ரொம்ப அடம் பிடிக்கிறான்..
அவன் நல்ல புள்ளை குறை சொல்லாத
நேத்து வரை நல்ல புள்ளைதான் சார் .. உங்க கூட சேர்ந்த பிறகு சொல்லவே வேண்டாம்.. ஏற்கனவே அவர் ரெட்டைவால் , இப்போ உங்கள மாதிரியே சிடுசிடுன்னு நிக்கிறான்.. உங்களுக்கு புண்ணியமா போகும்.. தயவு செஞ்சு என் மகன நீங்க எங்கேயும் கூட்டிட்டு போகாதீங்க..
ஏன் கூட்டிட்டு போனா என்ன
அதேபோல எங்கிட்டையும் எதிர்பார்க்கிறான்.. நேத்து என்கிட்ட வந்து ஹீரோ போல மேல தூக்கிப்போட்டு பிடிக்க சொல்றான்.. முடியுமா சார்.. நீங்க பாட்டுக்கு எல்லா கெட்ட பழக்கத்தையும் கற்றுக் கொடுக்குறீங்க... என் நிலைமையை யோசிச்சி பாருங்க சார்..
ஏதோ பலநாள் பழகிய நண்பர்கள் போல இருவரும் உரையாடி கொண்டே வந்தனர்.. அவனும் அவளை வம்புக்கு இழுத்து பேச வைத்துக் கொண்டே வீடு வரை வந்து சேர்ந்தான்..
சரி சரி முகத்தை தொடச்சுட்டு போ.. அம்மாகிட்ட எதுவும் சொல்லாதே.. தெரிஞ்சா வருத்தப்படுவாங்க.. நாளைக்கு காலைல வந்து பார்க்கிறேன்.. போயிட்டு வா என்று மென்மையாக கூறியவன்.. இறங்கி போனவளை பார்த்துக் கொண்டே இருந்தவன்.. ஏதோ ஞாபகம் வந்தவனாக
கீதா என்று அழைத்தான் அவன் குரலுக்கு அங்கிருந்து திரும்பி பார்த்தவளிடம்.. இறங்கி போய் ஒரு விசிடிங் கார்டை கையில் கொடுத்தவன்..
இது என்னோட நம்பர் ஏதாவது தேவைன்ன, இல்ல பிரச்சனைனாலும் தயங்காம எனக்கு போன் போடு நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்..கிருத்திகா அவனை சந்தேகப் பார்வையோடு பார்க்கவும்..
உடனே உனக்கு மூளை எங்கெல்லாமோ சுத்தி போயிருது.. தப்பா நினைக்காத உனக்காக இல்ல என்னோட பாலாவுக்காக உனக்கு உதவி செய்கிறேன்..மற்றப்படி உன்னை எனக்கு பிடிக்கவே இல்லை சிரியா மூஞ்சி, எப்ப பார்த்தாலும் அழுத வடிஞ்சிட்டு இருக்க வேண்டியது... சிரிச்சா என்ன உங்க அப்பா வீட்டு சொத்தா குறைச்சுரும்..
ஹலோ அத நீங்க சொல்லாதீங்க சார்.. நீங்க தான் கஞ்சி போட்ட வெள்ளை சட்டை மாதிரி திரியுவீங்க நானெல்லாம் எப்பவாவது சிரிக்கதான் செய்வேன் பேச வந்துட்டார்.. கொஞ்சம் அமைதியா இருந்தா எகிரி எகிரி பேசுறார் என முணுமுணுத்து அவனை திட்டிக்கொண்டே வீடு நோக்கி நடந்து போனாள் ....
அவள் போய் கதைவை அடைக்கும் வரை நின்று பார்த்து விட்டு திரும்பிவன் தன் பெற்றோர் கேள்வியாக அவனை பார்த்து கொண்டிருப்பதை பொறுபெடுத்தாமல்...
என்னம்மா இந்த பக்கம்...
இல்லப்பா சாப்பிட்டது செமிக்கல அதான் சின்ன வாக்கிங்...
ஓகே நான் வீட்டுக்கு போறேன் வாங்க என காரை அதன் இடத்தில் விட்டுவிட்டு வீட்டுகுள் யோவ் விட்டான்....இரவு அவன் சாப்பிட அமரும் போது பத்மா அவனுக்கு சாப்பாட்டை வைத்து கொண்டே....
அன்பு அந்த பொண்ணு யாருப்பா?
இன்னைக்கு வரை பாஸ்கர் மனைவி என் தாலி ஏறின பிறகு அன்பு மனைவி வேற ஏதாவது கேட்கணுமா என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக சொல்லி விட்டு எழும்பி போன மகனை அதிர்ந்து போய் பார்த்தனர்....
என்ன அன்பு சொல்ற ..
நடக்க போறதை சொல்றேன்...
இதுக்கு ஒருநாளும் நாங்க சம்மதிக்க மாட்டோம் எங்களுக்கு இருக்கிறது ஒரே பிள்ளை இப்படி இரண்டாம் தாரமா ஒரு பொண்ண என் மருமகளா ஏத்துக்க முடியாது ....
நான் யாரையும் ஏத்துக்க சொல்லலை என் முடிவு இதுதான் யாருக்கு பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் கீதாதான் என் மனைவி ...
அன்பு அம்மா கேட்கிறது தப்பு இல்லையே உனக்கு என்ன குறைன்னு அவள கல்யாணம் பண்ணணும்..அதுவும் ஒரு குழந்தைக்கு தாய் அவள போய் அசிங்கமா இருக்குடா சமூகத்தில தலைநிமிர்ந்து நடக்க முடியுமா....
அவள அங்கிகரீக்காத சமூகமும் ஏன் நீங்களும் கூட எனக்கு தேவையில்லை... நான் நிம்மதியா மூச்சு விட விரும்புறேன் நான் இழந்த போன சந்தோஷத்தை நிம்மதியை தேடுறேன் என் வழியில குறுக்க வராதீங்க ப்ளீஸ் என்று விட்டு படியேறி போக ஆரம்பித்தான்....
அன்பு அப்போ உன்னையே நம்பி மூணு வருசமா காத்திருக்கிற ஸ்வேதாவுக்கு என்ன பதில் சொல்ல போற..
என் வாழ்க்கை கீதாகூட மட்டும் தான்னு சொல்லிடுங்க உங்களால முடியலையா நானே சொல்லிடுறேன் முடிந்தது என்பது போல் அறையை பூட்டி கொண்டான்.....
இத்தனை நாள் திருமணம் வேண்டாம் என்றவன் திருமணம் செய்ய சம்மதம் சொன்னதில் திருப்தி அடைவா? இல்லை விதவை பெண்ணை திருமணம் செய்ய போவதை நினைத்து வருத்தபடுவதா என புரியாது நின்றனர்....
புரியாத பல புதிர்கள்தானே வாழ்க்கையை தீர்மானிக்கிறது...
7
பின் வந்த நாட்கள் எல்லாம் அன்பு,பாலாவின் அட்டகாசங்கள் தான் டியூட்டி போயிட்டு வந்து தன் வண்டியின் ஹாரன் அடித்தால் போதும் ஐஐஐஐ ஹீரோ வந்துட்டார் என்று போட்டிருக்கும் ஆடையோடு ஓடிவிடுவான்.... அவன் கழுத்தில் குரங்கு குட்டி போல் தொங்கி கொள்வான்.. அனைவரும் இதை கண்டு குசுகுசுத்து கொண்டாலும் அவனை எதிர்த்து பேச முடியாதே... கிருத்திகா காதுக்கும் விஷயம் வந்துவிட்டது..
அன்பு சாருக்கும் கிருத்திகாவுக்கும் ஏதோ இருக்கு போல அதான் யாருக்கிட்டையுமே பேசாம தள்ளி இருந்தவங்க அவர்கிட்ட மட்டும் பிள்ளையை கொடுக்கிறதும் பேசுவதும் தப்பாதான் இருக்கு யாருக்கு தெரியும் எந்த பொத்துக்குள்ள எந்த பாம்பு இருக்கோ நல்லவ வேஷம் போட்டாள்க கடைசியா வசதியா ஒருத்தன் சிக்கினதும் வேஷம் கலஞ்சி போச்சி போல என்று அன்று அன்புவிடம் அடி வாங்கிய ஏஸ்பி கிருத்திகா காதுபட சொல்லவும் கூனி குறுகி போனவள் நேரடியாக போய் நின்றது அன்புவிடம் தான்....
என்ன விஷயம் பணியில் இருந்தவன் அடுத்த வார்த்தை எப்போதும் பேச மாட்டான்...
உங்க கிட்ட பெர்சனால கொஞ்சம் பேசணும் சார்...
பெர்சனலா பேச ஆயிரம் இடம் இருக்கு இது வேலை பார்க்கிற இடம்.. எனக்கு நைட் ஏழு மணிக்கு ட்யூட்டி முடியும் பிறகு பேசலாம் ...
சார்..
வாட் போ என்றதும் வேறு வழியில்லாமல் வெளிய வந்தாள் வேலையில் கவனம் போக மறுக்க....
என்னவெல்லாம் பேசுகிறார்கள் எனக்கு ஏன் இந்த நிலைமை பேசினால் வாயாடி ஆம்பள பிடிக்கிறான்னு சொல்வாங்கன்னு என் இயல்பை தொலைச்சிட்டு வாழ்றேன் அப்பகூட வாழ விடாம துரத்தினா நான் என்ன பண்ணுவேன் என்றவளுக்கு தன் கணவன் பாஸ்கரன் நியாபகம் வந்தது...
இனியவன் அவ்வளவுதான் ஒரே வார்த்தையில் அவனை வரையறுத்து விடலாம்... அப்போதுதான் புரிந்து கொண்டு வாழ ஆரம்பித்தாள் அதற்குள் எல்லாம் காலைநேர பனி போல கரைந்து கந்தலாகி போனதை விதியின் கோர தாண்டவம் என்றுதான் சொல்ல வேண்டும் அதற்கு மேல் முடியாமல் விடுப்பு வாங்கி கொண்டு வீட்டுக்கு போய்விட்டாள்... மாலை கிருத்திகாவை தேடி ஒரு பெண் வந்திருப்பதாக லெட்சுமி அழைக்கவும்...
யாரா இருக்கும் இங்க எனக்கு யாருமே தெரியாதே யோசனையாக வந்தவள் முன்பு சுடிதார் அணிந்து ஹை கிளாஸ் லுக்கில் அழுகு ததும்ப ததும்ப அமர்ந்திருந்தாள் ஸ்வேதா அன்புவின் பழைய காதலி சொந்த மாமன் மகள்...
காதலியா ?ஆம் அவன் விரும்பி காதலித்த காதலி ...
நீங்க யாருன்னு தெரியைலையே கிருத்திகா தயக்கமாக அவளை ஏறிடவும்...
பட் எனக்கு உங்கள நல்லா தெரியும் உங்க கூட நானா கொஞ்சம் தனியா பேசணும் வர முடியுமா....
ம்ம் என்று வெளியே வந்தவள்..ஸ்வேதா ஆடி கார் வாசலில் நின்றது..
ஏறுங்க கிருத்திகா..
சாரி நான் என்னோட பைக்ல வர்றேன்ங்க எங்க வரணும்னு மட்டும் சொல்லுங்க..ஸ்வேதா புருவத்தை வியப்பாக விரித்து கொண்டவள்...
பக்கத்து பார்க்கில வெயிட் பண்றேன்...
ஓகே வர்றேன் என இருவரும் அந்த இடம் நோக்கி சென்றனர்....
ஸ்வேதா அருகில் போய் அமர்ந்தாள்...
நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?
யா அதுக்காகதான வந்திருக்கோம் கிருத்திகா.. நான் ஸ்வேதா அன்புவோடு லவ்வர்...கிருத்திகா வியக்கவெல்லாம் இல்லை...
ஓஓஓ நல்லதுங்க என்ன பார்க்க வந்த நோக்கம் ...
நான் அவர கல்யாணம் பண்ண மூணு வருசமா காத்திருக்கேன்... ஆனா என்ன அவாய்ட் பண்ணுறார்.... என்ன மறந்துட்டு வேற பையனை கல்யாணம் பண்ணிக்க சொல்றார்...
சரிங்க இதெல்லாம் எங்கிட்ட ஏன் சொல்றீங்க அவளுக்கு தலையும் புரியவில்லை காலுமு புரியவில்லை அவளே தலை மேல் வெள்ளம் ஓடுவது போல் பிரச்சனையில் இருக்கிறாள் இந்த பொண்ணு வேறு சம்மந்தம் இல்லாது பேசவும் தலை சுற்றிய நிலையில் அமர்ந்திருந்தாள்....
சம்மந்தம் இருக்குங்க அவர் என்ன வேண்டாம்னு சொல்ல காரணம் நீங்க..
வாட்இஇஇ நானா?? அதிர்ந்து போனாள்...
எஸ் நீங்கதான் காரணம் ...
கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்லுங்க...
இன்னுமாங்க உங்களுக்கு புரியல அவர் உங்கள கல்யாணம் பண்ணிக்க விரும்புறார்.. உங்கள தேடிதான் இந்த ஊருக்கே வந்தாரு.. உங்களாலதான் என் காதலையும் என்னையும் தூக்கி போட்டுட்டார் இப்ப யாரு எப்படி போனாலும் பரவாயில்லை எனக்கு கீதாவும் பாலாவும் வேணும் ஒத்த கால்ல நிற்கிறார் இதுக்கு மேல என்னத்தங்க சொல்லணும்....
கிருத்திகா பேயடித்தது அதன் பின்பு உடனே முனி அடித்தால் எப்படி இருக்குமோ அது போல அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தாள்....
நீங்க பார்க்கிற பாரவையிலேயே உங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு தெரியுது .. ஆனா நீங்க அறிய வேண்டிய விஷயம் ஒன்னு இருக்கு....அத கேட்டு உங்களுக்கு ஷாக் கூட ஆகலாம்...
இதுக்கு மேல என்னடா ஷாக்கு என்று மனம் அலறியது ....
நீங்க புருஷன இழந்து இப்படி விதவையாக இருக்க அன்புதான் காரணம்... உண்மையை போட்டு உடைத்து விட்டாள்....
என் புருஷன் சாக இவர் காரணாமா? திகைப்பு மிகுதியில் கிருத்திகா நெஞ்சில் கைவைத்து அடுத்தடுத்து வரும் பூகம்பம் தாங்க இதயத்த அமைதி படுத்த பார்க்க அதுவோ ஏகிறி குதித்தது.
நான் உங்க கதை பேச வரல எனக்கு அன்பு மாமா வேணும் அவரு இல்லாம எனக்கு வாழ்க்கை இல்லை தயவுசெஞ்சி எங்க வாழ்க்கையில குறுக்க வராதீங்க உங்கள கையெடுத்து கும்பிடுறேன் என் அன்பு மாமாவ எனக்கு தந்திடுங்க என வடிந்த தன் கண்ணீர் துடைத்து கொண்டு ஸ்வேதா கிருத்திகா கையை பிடித்து கொண்டு தன் காதலை அவளிடம் யாசிக்க அவள்தான் மூளை மரத்து போன நிலையில் அல்லவா நிற்கிறாள்...
நீங்க நல்ல பொண்ணுன்னு எனக்கு தெரியும் அதனால்தான் பேசி பார்க்க வந்தேன் சாரி உங்கள காயப்படுத்தி ஏதாவது சொல்லியிருந்தா மன்னிச்சிடுங்க வர்றேன் நல்ல முடிவா எடுங்க அது எனக்கு சாதகமா இருந்தா ரொம்ப சந்தோஷம் என்று வந்த வேலை முடிந்தது என ஸ்வேதா தன் காரில் ஏறி போய்விட்டாள்.... கிருத்திகாவின் நிலை வருண பகவானுக்கு கண்ணீரை கொடுத்து போல வானம் அதிர சொரென மழை கொட்டியது ஆனால் சிலை போல இருந்த இடத்திலேயே கிருத்திகா அமர்ந்திருந்தாள்....
இரவு வேலை முடிந்து வந்த அன்பு பாலாவை போய் பார்க்க போனவன்
கீதா சத்தம் இல்லை எங்க போனா?
அதான் தம்பி நானும் வாசலேயை பாத்துட்டு இருக்கேன் சாயங்காலம் ஒரு பொண்ணு வந்து பேசணும்னு கூட்டிட்டு போச்சி மழை வேற பெய்யுது போன பொண்ணு இன்னும் திரும்பி வரல கொஞ்சம் என்னன்னு போய் பாத்துட்டு வர முடியுமா தம்பி...
என்ன அம்மா இது இப்போ சொல்றீங்க யாரு என்னன்னு தெரியுமா..
தெரியலையே தம்பி நல்ல பணக்கார வீட்டு பொண்ணு போல இருந்தது...
ஒருவேளை ஸ்வேதாவா இருக்குமோ என மனம் மணியடித்தது.. அம்மா அங்கே போன் போட்டு கூறிவிட்டார் என காவலன் புத்தி கூர்மையாக செயல்பட்டது...
சரி எங்க போனாங்க...
பார்க் பக்கம் போனாங்க தம்பி ..
இதோ கூட்டிட்டு வர்றேன் நீங்க கதவ பூட்டிக்கோங்க என்று அன்பு தன் பைக்கை தூக்கி கொண்டு மழையில் நனைந்த படி பார்க்கில் நுழைந்தான் இருட்டில் நிழலோவியமாக மழையில் நனைந்த கோவில் சிலை போல் அமர்ந்திருந்த கிருத்திகாவை கண்டவனுக்கு இதயம் படும் வதை ஹாய் மொழியில் கூறவா வேண்டும்....
கீதாம்மாஆஆஆஆ என்ற அவன் குரலில் தவம் கலைத்தவள் ருத்ரம்மா தேவியாக தன் கண்களை நீலியாக விரித்து அன்பு சட்டையை கொத்தாக பிடித்தவள்...
என் புருஷன் சாக நீதான் காரணமா சொல்லு நான் இப்போ பூ இல்லாம பொட்டு இல்லாம வக்கிரம் பிடிச்ச ஆண்களிடமிருந்து ஒளிஞ்சி ஒளிஞ்சி ஓட நீதான் காரணமா...
அவன் அமைதி பயத்தை கொடுத்தது...
ஆமான்னு சொல்லிடாதீங்க ... நான் என் புருஷனுக்கு பிறகு நம்பி பேசினது உங்ககிட்டதான்.. நீங்களும் பொய்யின்னு சொல்லுடாதீங்க... என் நம்பிக்கையை குழைச்சிடாதீங்க சார்... ப்ளீஸ் பேசுங்க சார் என் புருஷன் சாக நீங்களா காரணம்.....
ஆமாஆஆஆ என தெளிவாக வந்து விழுந்தது அன்புவின் வார்த்தை...சுக்கு நூறாகி போனாள்....
அவன் பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடுகிறானா?
8
நான்தான் காரணம் நானேதான் காரணம் என் மடத்தனம் தானா காரணம் நீ இப்போ இப்படி நிற்க இந்த பாவி காரணம் கண்ணீர் கன்னம் தாண்டியது எத்தனை நாள் நெஞ்சை அழுத்திய பாரம் இது வெடித்து விட்டது... ஆண் அழக்கூடாதா யார் சொன்னது அழுகை எப்போதும் அன்பை பிரதிபலிக்கும்....
சார்...
ம்ம் பாஸ்கர் சாக நான்தான் காரணம் என்றவன் மூன்று வருடத்துக்கு முந்தைய சம்பவத்தை கூற ஆரம்பித்தான்....
பாஸ்கர், அன்பு இருவருமே சென்னையில் ஏஎஸ்பியாக பணியாற்றினர் அப்போதுதான் பாஸ்கருக்கு திருமணம் முடிந்திருந்தது அவனும் தன் தாய் பார்த்து கிருத்திகாவை கைகாட்ட மறுப்பு சொல்லாது திருமணம்செய்து கொணடான்.. அதன் பிறகு இயல்பான வாழ்க்கை காவலன் வேறு சொல்லவா வேண்டும் அயராது வேலை ஆனாலும் ஒருநாளும் இவளிடம் தன் கோவத்தை காட்ட மாட்டான் தாயின் ஆதரவில் படித்து வளர்ந்ததால் பெண்களுக்கு எப்போதும் மதிப்பு கொடுப்பவன்... உதவும் மனப்பான்மை கொண்டவன் இப்படி சொல்லி கொண்டே போகலாம் சென்னையில் பணியமர்த்த பட்ட பிறகுதான் அன்பு பழக்கம் ஒத்த வயது பாஸ்கர் அமைதியின் திருவுருவம் தான் உண்டு தன் வேலை உண்டு எனும் ரகம் அன்பு அடாவடி வாய் திறந்தால் கலாய்த்து கிண்டல் அடித்து யாரையாவது ஓட்டி கொண்டே இருப்பான்..
காதலில் மட்டுமா எதிரெதிர் துருவம் ஈர்க்கும் நட்பில் கூட ஈர்க்குமே..அப்படி நட்பானவர்கள்தான் இருவரும்...
அன்பு தன் மாமன் மகள் ஸ்வேதாவை காதலித்தான் ஆனால் காதலை கூறவில்லை.. அவள் பிறந்த நாள் அன்று காதலை கூறிவிட வேண்டும் என்று ஒரு தங்க மோதிரம் ஒன்றை வாங்கி வைத்து காத்திருந்தான்...
அப்போது ரஷ்யாவில் இருந்து விஞ்ஞானி ஒருவர் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு இரண்டு நாள் து பேச இருப்பதாகவும் .. அவருக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் பாதுக்காப்பு வழங்கும் படி அன்பு, பாஸ்கர் தலைமையில் டீம் பிரிக்க பட்டது.... முதல் நாள் அன்புவுக்கு இரண்டாம் நாள் பாஸகர் டீம் ..முதல்நாள் அன்றுதான் ஸ்வேதா பிறந்த நாள்... ஆசையாக காத்திருந்த நாளில் கடமை அழைக்க.. அதை தவிர்க்க முடியாதவன் சரி என விருப்பம் இல்லாது போனான்... சார்ஜ் எடுக்கும் முன்பு பாஸ்கர் எதிரில் வரவும் இருவரும் பேச ஆரம்பித்தனர் .. அன்பு முகம் பொலிவு இல்லாது இருக்கவும் ..
என்ன அன்பு முகத்தில தேஜஸ் இல்லை..
இன்னைக்கு ஸ்வேதா பிறந்தநாள் ..
ஓஓ ஆமால்ல தாஜ்மஹால் பரிசு கொடுத்து லவ்வ சொல்ல போறேன்னு நாலு நாளா என் காது ஜவ்வு கிழிய வச்சியே , போகல..
அட போடா நீ வேற கடுப்பை கிளம்பிகிட்டு இவர இன்னைக்கு வரலைன்னு யாரு அழுதா.. பாரு ஒன்னும் பண்ண முடியல இடத்தை விட்டு நகரவே முடியல ..
ஹாஹா உன்ன பார்த்தா பாவமாதான் இருக்கு..
நீ ஏன் சிரிக்க மாட்ட .. உனக்கு காலாகாலத்துல கல்யாணம் ஆகி.. இதோ இப்ப கீதா மேடம் ஏழு மாசம்.. நாளைக்கு வளைகாப்பு ஏக ஜாலி .. ஆனா நான் அப்படியா? ஒரு லவ்வுக்கே நாக்கு தள்ளுறேன்...
சரி சரி அழுதுடாதடா ஒன்னு பண்ணலாம் சிஸ்டர பக்கத்து காஃபி ஷாப்புக்கு கூப்பிடு...
கூப்பிட்டு ...
ப்ச் கூப்பிடு.. போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடு...
அட போப்பா நடக்குற விஷயத்தை பேசு...
ஏன் நடக்காது நான் உனக்கு பதிலா இங்க இருக்கேன் .. நீ போ.. நாளைக்கு எனக்கு பதிலா ஞீ சார்ஜ் எடுத்துக்கோ ...
கேட்க நல்லாதான் இருக்கு .. ஆனா..
போயிட்டு வாடா நான் பாரத்துக்கிறேன்..
நண்பேன்டா .. உனக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவேன்டா என பாஸ்கர் கன்னத்தை கிள்ளி விளையாட்டாக முத்தமிட்டு போனவனை சிரித்த முகத்தோடு பார்த்து கொண்டிருந்தான் பாஸ்கர்....
அவன் சிரிப்பு இறுதியாக போவதை யாரும் அறிந்திலர் .....
அன்பு ஸ்வேதாவை காஃபி ஷாப் வர வைத்து தன் காதலை கூறிட அவளுக்கும் அவன் என்றால் ஏக பிடித்தம் உடனே காதலை ஏற்று கொண்டாள்..
சாரி ஸ்வேதா எனக்கு வேலை இருக்கு.. பாஸ்கர் தனியா இருப்பான் வரட்டா... ஏதோ மனம் நிலையில்லாது தவித்தது.. பாதுக்காப்பு பணியை இன்னொரு முறை செக் செய்ய வேண்டும் என நினைத்தான்...
என்ன மாமா ஒரு ஐஞ்சு நிமிசம் பேசிட்டு போங்களேன்..
இனி காலம் முழுக்க பேசதானே போறோம்... வேலைளயை ஒதுக்கிட்டு வந்ததே ஒருமாதிரி இருக்கு .. பிறகு பார்க்கலாமேடா...
போங்க மாமா என ஸவேதா சிணுங்கல் கண்டு சிறிது நேரம் அவளிடம் பேசிவிட்டு.. கூட்டம் நடைபெற்ற இடம் நோக்கி வந்தான்..
ஆனால் ஆனால்..
அவன் முன்னே இரத்தமும் சதையுமாக குற்றுயிராக வந்து விழுந்தான் பாஸ்கர்... தீவிரவாதிகள் குண்டு வைத்திருந்தனர்.. எல்லாரையும் காப்பாற்றி மேடையை விட்டு கீழிறக்கிய பாஸ்கரன் ... தானும் கீழிறங்கி வரும் முன்பு காலன் வந்து அழைத்து கொண்டான்... அவன் சேவை விண்ணுலகத்துக்கு தேவை என்று நினைத்து..
பாஸ்கர் என நடப்பதை உணர முடியாது அன்பு தத்தளிக்க.. ரத்தம் தோயந்த கையை நீட்டி அன்புவை அழைத்தவன்....
என் குழ... ந்...தை என் கிருபா....என் கிருபா..அனாதையா ஆஆஆ ஹக் என்றவன் ஜீவன் அன்பு மடியிலேயே போய்விட்டது.....
ஆஆஆஆஆஆஆ பாஸ்கர், கண்ண தொறடா டேய் பாஸ்கர் அய்யோ பாஸ்கர்... தான் ஒரு உயர் அதிகாரி என்பதையும் மறந்து அழுதான் அவன் மேல் விழுந்து கதறினான்...
ஒரு சகாப்தம் முடிந்து போனது...
அன்புவை பாசக்கயிறு கொண்ட இழுக்க வந்த எமனிடம்.. நட்புக்காக தன் உயிரை கொடுத்து விட்டான்....
அன்புக்கு மாதம் அறைக்குள் சிறை வாசம்... வெளியுலகம் வெறுத்தது ... ஸ்வேதா வந்தால் எரிந்து விழுந்தான்.. அந்த காதல் தானே இத்தனைக்கும் காரணம் என நினைத்து.... எனக்காக காத்திருக்காதே. நான் சொன்ன காதலை மறந்துடு என்று ஒற்றை வார்த்தையில் காதலுக்கு முடிவுரை எழுதி விட்டான்....
குடியரசு தினவிழா அன்று வீர மரணம் அடைந்த காவலாளிகள் மனைவியருக்கு பதக்கம் வழங்கப்பட அது லைவ் ஷோவில் ஓடி கொண்டிருந்தது... தண்ணீர் குடிக்க சமலறை சென்ற அன்பு..
மிஸஸ் பாஸ்கரன் என்ற அறிவிப்பில் ஓடி வந்து பார்த்தான்..
மூன்று மாத கை குழந்தையை தூக்கி கொண்டு வெளிர் நிற புடவையில் கிருத்திகா வந்து அந்த மெடலை வாங்கவும்...சுக்கு நூறாக உடைந்து போனான்...
அவன் அல்லவா செத்திருக்க வேண்டும்.. இப்படி ஒரு இளம் பெண்ணும், பிஞ்சு சேயும் தனித்து, தவித்து நிற்க நான்தானே காரணம் என்று உள்ளம் வெதும்பி போனவன்.. ஆற அமர யோசித்தான்.... கானகத்தில் வழி தேடியது போன்ற கதையாகி போனது...
அவள் தஞ்சாவூர்போய்விட்டதாகவும் ... அங்கே அரசு ஏதோ பணி வழங்கியதாகவும் அறிந்தான்... மறுபடியும் கூட்டுக்குள் சுருங்கி விட்டான்.... வேலைக்கு போகவில்லை என்றால் வேலை பறி போய்விடும் என இருமுறை எச்சரிக்கை வேறு வந்துவிட.... தன் மனதை மாற்ற மீண்டும் பணிக்கு சென்றான் ஆனால் முற்றிலும் வேறொருவனாக அவன் இதழ்கள் சிரிப்பை மறந்தது... கண்கள் ஒளியை மறந்தது..முகம் பொலிவை இழுந்தது ....
விடை கிடைக்காத கேள்விகளோடு பயணம் செய்தான்... அவர்களையே நினைத்து கொண்டிருந்ததாலோ என்னவோ அவன் இதயத்தை முற்றிலும் கிருத்திகாவும், பாலாவும் நிறைந்து விட்டனர்..அவன் சாப்பிடும் போது சாப்பிட்டிருப்பாளா, குழந்தை எப்படி இருக்கும் ... தகப்பன் தேடுமே? எப்படி சமாளிப்பாள் சதா அவர்கள் நியாபகமே புண்பட்ட நெஞ்சுக்கு மருந்தாகி போனது....
எந்த புள்ளியில் கிருத்திகாவை விரும்ப ஆரம்பித்தான் என அவனுக்கே தெரியாது.... அவளை காண ஏங்கினான் பட்டு போன அவள் வாழ்க்கையில் பன்னீர் தூவ விரும்பினான்... பாலுவுக்கு தகப்பன் அன்பை கொடுக்க விரும்பினான் நித்தமும் கனவில் அவளோடு பேச ஆரம்பித்தான்..
கீதா கீதாம்மா என்னால தான்டா உனக்கு இந்த நிலைமை மன்னிப்பியா.. அந்த பிஞ்சு குழந்தை பெயர் கூட தெரியாது...
உன் அப்பா உயிர் போக நான்தான்டா காரணம் கண்ணா என்ன மன்னிச்சுடு என தலையணையை நனைத்தான்.... அவன் தன் காதலை அறிந்து கொள்ள புரியாத கேள்விக்கு விடை காண மூன்று வருடம் ஆகியது .. கிருத்திகா திருநெல்வேலி பணிமாற்றம் ஆகி போய்விட்டது அறிந்தான்.. இவனும் ஐபிஏஸ் ஆகியிருந்தான் எனவே தன் பணியை அங்கே மாற்றி கொண்டு வந்து விட்டான்....
இப்போ சொல்லு கீதா நீ இப்படி நிற்க நான்தான காரணம்.....
என்ன சார் நீங்க விதி இப்படின்னு என் தலையில எழுதி வச்சிருக்கு இதுல எங்கிருந்து நீங்க வந்தீங்க.. போங்க சார், போய் வேலையை பாருங்க.. காதல் அது இதுன்னு கண்டபடி உளறாதீங்க..அந்த பொண்ணு பாவம் உங்களுக்காக காத்து கிடக்கிது போய் வாழ பாருங்க சார்..
கீதா உன்ன விட்டுட்டு இனி எனக்கு தனியா வாழ்க்கை இல்லை...
அதுக்கு ஒருநாளும் நான் சம்மதிக்க மாட்டேன் சார்.. உங்க மேல மரியாதை இப்பவும் இருக்கு கெடுத்துக்காதீங்க .. இனிமே என்ன தேடியோ, என் மகனை தேடியோ வராதீங்க.. வந்தீங்கன்னா என் புருஷன் போன இடத்துக்கே நானும் போயிடுவேன் என வேக எட்டு போட்டு நடந்து போனவளை அதிர்ந்து போய் பார்த்தான்...
அவன் குற்றவுணர்வு நீங்கி போனது... ஆனால் கவிதையாக கனவில் வடித்து வைத்திருந்த காதல் காணாமல் போனதுவோ?
9
என்ன இவ இவ்வளவு சாதாரணமா என் மேல தப்பே இல்லன்னு சொல்லிட்டு போயிட்டா... அன்னைக்கு எனக்காக பாஸ்கர் போய்தானே செத்துப் போயிட்டான் .. அவன் மட்டும் போகாம இருந்திருந்தா இன்றைக்கு இந்த நிலைமை வந்திருக்காதே.. அப்போ என் மேல தப்பு தானே ஒன்னுமே இல்லங்கிற மாதிரி சொல்லிட்டு போயிட்டா... எப்படி எப்படி இனி அவ பின்னாடி வரக்கூடாதா? வந்தா செத்துருவேன்னு வேற மிரட்டிட்டு போறா.. அதுக்காக இவளை விட முடியுமா.. இவதான் என் பொண்டாட்டி பாலாதான் என் குழந்தைன்னு மூணு வருஷமா வாழ்ந்திட்டிருக்கேன்.. திடீர்னு அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டு போனா எப்படி என கிருத்திகா பின்னாடியே ஓடி போய்.. அன்பு அவளை மறைத்தார் போல் நின்று கொண்டான்..
ப்ச் , அதான் தெளிவா சொல்லிட்டேனே சார் மறுபடியும் ஏன் தொல்லை பண்றீங்க.
இங்க பாரு கீதா என் மேல தப்பு இல்லைன்னு சொல்றது உன்னோட பெருந்தன்மையை குறிக்கிது.. உன் வாயால கேட்ட பிறகு எனக்கு சத்தியமா குற்றவுணர்வு இல்லை.. ஆனா அதுக்காக என்னோட காதல நான் விட்டுக் கொடுக்க முடியாது எனக்கு நீயும் பாலாவும் வேணும்டி உறவு வந்ததும் உரிமை வந்தது
சார் இதுக்கு பேரு காதலே இல்லை, ஈர்ப்பும் கிடையாது ...உங்களுக்கு என் மேல வந்திருக்கிறது மனிதாபிமானம்.. நான் இப்படி தனியா இருக்கிறதுனால வந்த கருணை.. அதுக்கு நீங்க வச்சுக்கிட்ட பேரு காதல்..
என்ன நீ விட்டா பேசிக்கிட்டே போற காதலுக்கும் கருணைக்கும் வித்தியாசம் தெரியாத ஆளா நான்..
எல்லாம் தெரிஞ்ச ஆளுன்னுதான் சார் உங்கள நெனச்சுக்கிட்டு இருந்தேன் .. ஆனா இப்போ சின்ன புள்ள மாதிரி விளையாட்டிட்டு இருக்கிறத பார்க்கும் போது உங்களுக்கு யாரு ஐபிஎஸ் வேலை கொடுத்துன்னு யோசிக்கத்தான் தோணுது...
என்ன விளையாடுறீயா என் காதல் உனக்கு விளையாட்டா தெரியுதா...
உங்களுக்கு என்ன சார் குறை.. நல்லா படிச்சு இருக்கீங்க பெரிய வேலையில் இருக்கீங்க.. எதுக்கு என்ன மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப் படுறீங்க.. கண்ணுக்கு லட்சணமா , வசதியான நீங்க லவ் பண்ணின பொண்ணு ..உங்கள உயிராக நேசிக்கிற பொண்ணு பக்கத்திலேயே இருக்கு போய் சந்தோஷமா வாழ பாருங்க சார் .. அத விட்டுட்டு சும்மா விடலை பசங்க மாதிரி காதல், இதயம் பூவ்னனு சினிமா டயலாக் எல்லாம் பேசாதீங்க சலித்துக் கொண்டு வீட்டை நோக்கி நடை போட்டாள்...
கீதா என் முடிவையும் நீ நல்லா கேட்டுக்கு நீதான் என் பொண்டாட்டி பாலாதான் என் குழந்தை இதுல எந்த மாற்று கருத்தும் இல்லை..
அசிங்கமா பேசாதீங்க சார் பாலா அவர் இரத்தம் அவர் உயிர்..
அத மறுக்கலையே அவன் கொடுத்த உயிரும் இரத்தம்தான் ஆனால் பாலா என்னோட பையன் அவனுக்கு நல்ல தகப்பனாக இருப்பேன் கீதா சத்தியமா சொல்றேன். உனக்கும், பாலாவுக்கும் எந்த குறையும் இல்லாம நான் பாத்துக்குறேன் என்ன நம்புடி
இப்படி எல்லாம் பேசும்போது தியேட்டர்ல வேணும்னா விசிலும் கைதட்டலும் பறக்கலாம் ஆனா இது வாழ்க்கை சார் ..எத்தனை நாளைக்கு எங்க மேல அன்பும் அக்கறையும் இருக்கும்.. உங்களுக்குன்னு ஒரு குழந்தை வர்ற வரைக்கும் உங்க ரத்தத்தில ஒரு பிள்ளை பிறக்கும் வரைக்கும்.. அதுக்கு பிறகு பாலா உங்களுக்கு வேண்டாத பிள்ளை ஆகிடுவான்.பாரமாவும் சுமையாவுமா தெரிய ஆரம்பிச்சிடுவான் .. அப்போ என்னால குடும்பங்கள் வட்டத்துக்குள் இருந்து வெளியே வரவும் முடியாது .. அதே சமயம் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உரிமையையும் என்னால முடியாமல் கொடுக்க முடியாது அந்த நரக வேதனை எனக்கு வேண்டாம் சார்... ஒரு பொண்ணு ஆம்பள துணையோடுதான் வாழனும்னு ஏதாவது சட்டம் இருக்கா .. எனக்கு என் மகன் இருக்கான், அவனுக்கு நான் இருக்கேன்.. இந்த வாழ்க்கை எங்களுக்கு போதும்.. எங்களுக்கு இடையில் யாரும் வரற்த நான் விரும்பல.. அது நீங்களாவே இருந்தாலும்.. எப்பவும் நீங்க எங்களுக்கு மூணாவது மனுஷன் தான் தயவுசெய்து எங்களுக்கு இடையில் மூக்கை நுழைக்காதீரங்க .. இதுக்கு மேல என்னோட முடிவை உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல.. படிச்சவர் புரிஞ்சுக்கோங்க.. என நிமிர்வாக பதிலை கூறிவிட்டு இருட்டு ஒளியியல் மின்னலாக மறைந்து போனவளை மரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தான்..
எப்படித் தன் காதலையும் ,நேசத்தையும் தான் கொண்டிருக்கும் பாசத்தையும் அவளுக்கு எடுத்துக்சொல்வது என்று தெரியவில்லை .. நீ இல்லை என்றால் நான் இல்லை என்பதை எப்படி அவளுக்கு தெரியப்படுத்துவது.. நான் கொண்டிருக்கும் காதல் உயிரை உருக்கும் உயிர் காதலடிப்பெண்ணே என்பதை எப்படி அவளுக்கு உணர வைப்பது புரியாது திகைத்து நின்றான்...
சோர்வாக வீட்டுக்குள் வந்த மகனின் நிலை அறியாத பத்மா...
ஸ்வேதா ஓடிவா அன்பு வந்துட்டான் பாரு...
ஸ்வேதா மாமா என ஓடிவந்து அன்புவின் கையை பிடிக்க போகவும் தன்னிச்சையாக தன் உடலை பின்னால் நகர்த்தி நின்று கொண்டவன் தன் கரத்தை நீட்டி அவளை தடுத்தான்...
அன்பு ஸவேதா சொன்னா அந்த பொண்ணு நல்ல பொண்ணு போல ..இவ சொன்னதும் புரிஞ்சிக்கிட்டு ஒதுங்கி போயிறதா சொல்லிடுச்சி இனி உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. எப்போ கல்யாணம் வச்சிக்கலாம்
ஓஓஓ வச்சிக்கலாமே அனைவர் முகமும் நிம்மதியை பிரகாசமாக வெளியிட்டது ஆனால் அடுத்த நொடியே அவன் எஃகு வார்த்தையில் அமாவாசை நிலவாக முகம் சுருங்கி விட்டது....
கல்யாணத்துக்கு இன்னைக்கேன்னாலும் நான் ரெடி ஆனா பொண்ணு கீதாவா இருந்தா .. என் மனைவியாக அவளுக்கு மட்டுமே உரிமை உண்டு... அவள சமாதானம் பண்ணி கூட்டிட்டு வர வேண்டியது என் பொறுப்பு கல்யாணத்துக்கு ரெடி பண்ணுங்க முடிந்தது எனும் விதமாக அன்பு தன் அறை நோக்கி செல்ல ஆரம்பித்தான்...
மாமா நில்லுங்க எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு போங்க... என்ற ஸ்வேதாவின் ஆவேச சத்தத்தில் அமர்கையாக திரும்பி பார்த்தவன்....
சொல்லிட்டா போச்சி என்று அவள் முன்னால் வந்து நின்றவன்..
என் மனைவி, காதலி, என் உயிர் ,என் உலகம் எல்லாம் கீதாம்மா மட்டும்தான் என்று உரக்க சொன்னவனை செய்வதறியாது பார்த்தனர்..
அவள் பெயரை கடல் மண்ணில் எழுதி வைக்கவில்லை அலை வந்து அடித்து போக... இதயச்சிறையில் குருதி கொண்டு எழுதிவிட்டான் அசைக்க முடியுமா?
10
நல்லா இருக்கு மாமா உங்க நியாயம் அப்போ எதுக்கு என் மனசுல ஆசை வளர்தீங்க.. இந்த மூணு வருசத்துல என் உயிர்காக்கும் மாமா நீங்க இல்லைன்னா நான் வாழவே மாட்டேன்..எனக்கு நீங்க வேணும் மாமா...
உனக்கு ஆயிரம் அன்பு கிடைக்கலாம் ஆனா என் கீதாவுக்கு நான் மடடும்தான் நல்ல கணவனா தோழனா இருக்கு முடியும் ஸ்வேதா இந்த உலகத்தில நான் மன்னிப்பு கேட்ட வேண்டிய ஒரு ஆள் உண்டுன்னா அது நீ மட்டும்தான் அன்னைக்கே ஏன்டா உன்கிட்ட காதலை சொன்னோம்னு தினம் தினம் உள்ளுக்குள்ள குமுறிக்கிட்டு இருக்கேன்..
அப்போ என் மேல உங்களுக்கு பாசமே இல்லையா மாமா...
அது நிறையவே இருக்கு ஆனா காதல் இல்லைன்னு சொல்றேன்..
அப்போ எதுக்கு என்ன காதலிக்கிறேன்னு சொன்னீங்க ..
அப்போ எனக்கு காதல்னா என்னன்னு புரியலையே மாமா பொண்ணு அழகா இருக்கா நான் பார்த்தா என்ன தப்பு காதலிச்சா என்ன தப்புன்னு ஒரு ஈர்ப்பு வந்தது அந்த ஈரபப காதல்னு நினைச்சேன் அப்போ நான் ஒன்னும் சின்ன பையன் இல்லைதான்.. ஆனா அந்த சமயம் என் ஆசை விருப்பம் பிடித்தம் மட்டும்தான் என் கண்ணுக்கு முன்ன தெரிஞ்சது....
அப்போ இப்போ அந்த காதல் பிடித்தம் எங்க போச்சி மாமா....
ஒரே வார்த்தையில சொல்லணும்னா என் மூச்சு காற்று அவதான் அவளுக்காக மட்டும் தான் நான் உயிர் வாழ்றேன் இல்லை பாஸ்கர் போன அடுத்த செகண்ட் நானும் போயிருப்பேன் ... என் பாலா முகத்த பார்த்துதான் நான் வாழ ஆசைப்பட்டேன் அவங்களுக்காக மட்டும் தான் இந்த அன்பு..
மாமா அவங்களுக்கு பாவம் பார்த்தா வேணும்னா பணம் இல்லை பாதுகாப்போ கொடுங்க வாழ்க்கை கொடுக்கணுமா... அவங்களுக்காக நம்ம காதலை மறைக்கணுமா ..
காதல்னா என்ன ஸ்வேதா அவளுக்கு முள்ளு குத்தினா எனக்கு இங்க வலிக்குது என இருதயத்தை தொட்டு காட்டினான்...அவள பத்தி தப்பா பேசினா கொல்ல தோணுது...அவள ஒரு நாள் பார்க்கலைன்னா தூங்க முடியல என் மகன் என் தோள்ல சாயலைன்னா அந்த நாள் இருட்டா தோணுது..என் விடியல் அஸ்தமனம் எல்லாம் அவங்க இரண்டு பேர் கையிலையும்தான் இருக்கு...
அப்போ நான்....
இந்த மூணு வருசத்துல என் கண்ணு உன்ன தேடல..என் மனசு உனக்காக ஏங்கல.. நீ என்ன விட்டுட்டு நல்ல வாழ்க்கை அமைச்சிக்கணும்..சந்தோஷமா இருக்கணும்னு தோணுது உன் மேல காதல் இருந்தா.. உன்ன என்னால விட்டு கொடுக்க முடியாது ஸ்வேதா...மனப்பூர்வமா மன்னிப்பு கேட்கிறேன் அந்த ஒரு நாள் நான் சொன்ன காதலுக்காக ஏற்கனவே உன்கிட்ட இதை பல தடவை சொல்லிட்டேன் நீ கேட்கல ... இன்னையோட இத முடிச்சிடலாம் ... என்னோட வாழ்க்கை அவங்ககூட மட்டும் தான் நான் அவ கூட இருந்தா சந்தோஷமா இருப்பேன் அவ என் கூட இருந்தா நிம்மதியா இருப்பா.. என் குழந்தைக்கு கிடைக்காத தகப்பன் பாசம் அள்ளி அள்ளி கொடுப்பேன்... எனக்கு என் கீதாம்மா வேணும் ஸ்வேதா என இமயமலையாக காதலை சுமந்து கொண்டு தவித்து போய் நின்றவன் காதலில் பிரமித்து போனாள் ஸ்வேதா அவள் மட்டுமா வாசலில் அன்பு தன் வீட்டில் விட்டு போன போனை கொடுக்க வந்த கிருத்திகாவும்தான்... போக மறுத்தவளை லெட்சுமிதான் போய் கொடுத்துட்டு வந்துடு என கட்டாயப்படுத்தினார்.. அவன் கூறிய காதல் மொழி கேட்டு வாயடைத்து போய் நின்றாள்...
எதை பார்த்து என் மேல் காதல்.. அழகை பார்த்தா இல்லையே என் கண்ணை தாண்டி அவர் விழிகள் எங்கும் அலைபாய்ந்து இல்லையே... இரக்கம் என்று நினைத்தால் அதுவும் இல்லை என்கிறான் அடம்பிடித்த குழந்தை போல பொம்மைக்காக சண்டையிடுபவன் போல அவளுக்காக அனைவரிடமும் மல்லுக்கு நிற்கிறான்..அவனின் காதலில் ஆடித்தான் போய்விட்டாள்..
ஆனால் இதை உலகம் ஒத்து கொள்ளாதே.. கூடாது நான் இருந்தால் தானே என்னை கட்டாயப்படுத்த முடியும் கண்காணாத இடம் சென்றுவிடுகிறேன் என நினைத்தவள் அசப்பு இல்லாது போனை வைத்து விட்டு ஓடிவிட்டாள்..
அன்பு இத நாங்க ஒருக்காலும் ஒத்துக்க மாட்டோம் .. ஊர் உலகம் சிரிக்கும்டா உனக்கு ஏதோ குறை இருக்கு அதனாலதான் இப்படி பிள்ளை இருக்கிற பொண்ண கட்டிக்கிட்டன்னு கேவலமா பேசுவாங்க அப்பு வேண்டாம்டா...
அவளும் பொண்ணு தானம்மா உங்களுக்கு அவ மேல இரக்கமே வரலையா.. என்னால்தான் அவ வாழ்க்கை இப்படி ஆகி போச்சின்னு உங்களுக்கு நல்லா தெரியும் அப்போ கூட உங்களால அவள ஏத்துக்க முடியலையா...
அவள மட்டும் னா கூட ஒத்துக்கலாம் ஆனா யாரோ பெத்த குழந்தையை நாங்க எப்படி எங்க பேர குழந்தைன்னு சொல்றது.. அவ நல்ல பொண்ணுதான் நீ விரும்பிய ஒரே காரணத்துக்காக அவள உனக்கு கட்டி வைக்கலாம்தான் .. ஆனா அந்த குழந்தையும் எப்படி எங்களால ஏத்துக்க முடியும்...
நான் யாரையும் ஏத்துக்க சொல்லலை அவருக்குள்ள எல்லாம் எனக்குரியது... அவளுக்கும் பாலாவுக்கவையும் ஏத்துக்காத இடத்தில நானும் எப்பவும் இருக்க போறது இல்லை...எனக்கு அவளோட சுயமரியாதை ரொம்ப முக்கியம் அதோட என் மகனோட அமைதியும் , சந்தோஷமும் அதவிட முக்கியம் ..யாரு ஒத்துகிட்டாலும் ஒத்துக்கலைன்னாலும் கீதா கூட என் கல்யாணம் நடக்கும்.. தாய் தகப்பனா முழு மனசோடு வந்து நிற்க்கிறதா இருந்தா வாங்க.. இல்லை, வர வேண்டாம் என் வழியை நான் பாரத்துக்கிறேன்.. வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசிய மகனை வாயடைத்து போய் பார்த்தனர்....
இன்னொரு விஷயம் எங்களுக்கு பாலா மட்டும் தான் இப்பவும் மகன் எப்பவும் மகன்... என பெருமூச்சி விட்டவன்... இது என் காதலுக்கு நான் கொடுக்கிற மரியாதை, என் கீதா நிம்மதிக்கு நான் கொடுக்க போற பரிசு என்று சொன்னவன் அறையை போய் பூட்டி கொண்டு அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்து விட்டான்....
இங்கு வீட்டுக்கு வந்த கிருத்திக்கா லெட்சுமியை சாட ஆரம்பித்து விட்டாள்..
உங்களுக்கு ஆரம்பத்திலேயே எல்லாம் தெரிஞ்சிருக்கு அப்படிதான அத்தை அவர் அமைதி ஆம் என்று பதில் சொல்ல..
உங்களுக்கு பாரமா இருக்கேன்னு சொல்லியிருந்தா நானும் என் மகனும் கண்காணாம போயிருப்போம் இல்லை அவர் போன இடத்துக்கு கூட போயிருப்போம் ..
அம்மாடி அப்படி சொல்லாதடா அவன் போனதையே இன்ன வரை என்னால ஜிரணிக்க முடியல அப்படி ஒரு வார்த்தையை இனி ஒரு தரம் சொல்லாதடா...
அப்போ ஏன் அத்தை என்கிட்ட மறைச்சிங்க உங்க மகன் இருந்த இடத்தில இன்னொருத்தருக்கு கொடுப்பேன்னு எப்படி நினைச்சீங்க வாழ்ந்தது ஏழு மாசமா இருக்கலாம் ஆனா அவர் மட்டும் தான் எனக்கு எப்பவும் அத்தை..ஏங்கி அழதவளை அணைத்து கொண்டவர்...
உனக்கு பாஸ்கர் போதும் ஆனா உன் மகன் அப்பாவுக்கு ஏங்கிறானே ம்மா ..
போக போக பழகிடும் அத்தை ...
நீயே உன் மகனை போய் பாரு புரியாத சிலவும் புரியும் என்றுதும் யோசனையாக மகனை போய் பார்க்க பாலா அன்பு போட்டோவை கையில் வைத்து கொண்டு...
அப்பா அப்பா வாப்பா டூர் போகலாம் வாப்பா என்று கனவிலும் அன்பு புராணம் பாடி கொண்டிருந்தான்....
அப்பாவா திகைத்து போய் தன் அத்தையை அவள் பார்த்தாள்...
சத்தியமா நான் சொல்லி கொடுக்கலம்மா... அவனேதான் என் அன்பு அப்பான்னு சொல்றான்....
அவர் வேலையைத்தான் இருக்கும்...
இப்பவும் தப்பு பண்றம்மா அவர் அவனுக்கும் உனக்கும் எல்லாமாமுமா இருக்க விரும்புறார்....
போதும் அத்தை இதை கேட்டு கேட்டு காது வலி வந்திடுச்சி நான் அவர் கண்ணு எதிர்க்க இருந்தாதான் பிரச்சினை காணாத இடத்துக்கு போயிட்டா இரண்டு நாள் தேடுவார் அப்புறம் மறந்துட்டு அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்குவார்...
மெல்ல சிரித்த லெட்சுமி.. சரி ம்மா ஒருவேளை உனக்காகவே காத்திருந்தா...
எப்பவும் என் முடிவு இதுதான் தீர்மானம் பண்ணி பேசிய மருமகளை இயலாமையில் பார்த்தவர்... அவள் இஷ்டப்படி அவள் வாழ்வு என நினைத்து கொண்டு...
சரிம்மா உன் இஷ்டப்படி பண்ணி நான் இதுவரைக்கும் உனக்கு அம்மாவாதான் இருந்திருக்கேன் இனிமேலும் அப்படித்தான் ஆனா எனக்கு பிறகு நீங்க இரண்டு பேரும் தனியா நின்னுருவிங்ளேன்னு தான் என்னால தாங்க முடியல....
குப்பை தொட்டியில போடடடு போற குழந்தைக்கு கூட ஒரு வாழ்க்கையும் ஆதரவும் கிடைக்கும் போது எங்களுக்கு கிடைக்காதா அத்த... எனக்கு உடம்புல தெம்பு இல்லாம இருக்காம் ஆனா மனசில வைராக்கியம் இருக்கு என் மகனை வளர்க்க அது போதும் நம்பினா என் கூட வாங்க காலம் முழுக்க உங்க மகளா இருக்கேன்...
எனக்குன்னு ஏது தனி வழி வா போகலாம் என தங்கள் பொருட்களை எடுத்து கொண்டு இரவோடு இரவாக பெங்களுர் டிரையின் ஏறி விட்டனர்...
அவன் காதலை எல்லைகோடுகள் வரையறுத்து விடுமோ?
11
இருப்பவனுக்குத்தான் எல்லாம் பிரச்சனை இல்லாதவனுக்கு யாரும் ஊரே யாவரும் கேளீர் தான் பெங்களுர் போய் இறங்கி கையில் வைத்திருந்த வைப்பு தொகை கொண்டு வீடு தேடினாள்.. தனி பெண்ணா முடியாது விதவையா சாரிங்க உங்கள பார்க்க பாவமா இருக்கு வீடு காலியானா சொல்லி அனுப்புறோம் நாசுக்காக மறுத்தனர்.. விரக்தியாக சிரித்து கொண்டு தன் மகனை தோளில் போட்டு கொண்டு அலைந்து திரிந்தாள்.... கருணை உள்ளம் கொண்ட முதிய தம்பதியர் மேல்மாடியை கைகாட்ட அப்பாடி என்று போய் தங்கி கொண்டனர் ..ஒரு அறை ,கிச்சன் மட்டுமே போதும் தன்னிறைவு கொண்டவள்.. அடுத்து வேலைக்கு நாயாக அலைந்தாள் இதில் கொடுமை என்னவென்றால்.. பாலா அன்பு அப்பா எங்க அப்பா வேணும் என தொடர் அழுகை அவனை அமைதியாக தட்டி கொடுத்தாள்.. முடியாது போக அதட்டினாள் .. அதுவும் முடியாது அடிக்க கூட செய்தாள்.. ஆனால் அன்னை போல பிடிவாதக்காரன் செவி சாய்த்தான் இல்லை....
அப்பா பார்த்தாலும் பார்த்தேன் இவன போல ஒரு பிள்ளையை பார்க்கல ஏற்கனவே வேலை கிடைக்காம திண்டாட்டம் இருக்கிற காசுல இந்த மாசம் ஓட்டலாம் அடுத்த மாசத்துக்கு என்ன பண்ணன்னு யோசிப்பேனா இல்லை இவன் கேள்விக்கு பதில் சொல்வேனா ... அவர் அம்மா கூட அன்புவ ஏலம் போட்டிருக்க மாட்டாங்க இவன் நொடிக்கு ஒரு தடவை அன்பு அன்புங்கிறான் பேருதான் அன்பு பண்றது எல்லாம் வம்பு மட்டும்தான் என புலம்பிய மருமகளை கண்டு ஊமையாக சிரித்தார்..
அம்மா அப்பாவை திட்டாதீங்க அப்பா பாவம் ...
ஆமான்டா உன் அம்மாவை தவிர எல்லாரும் பாவம்தான்.. நீ அழுது உருண்டாலும் இனிமே அவர பார்க்க முடியாது அடம் பிடிக்காம இரு ..அத்தை நான் போயிட்டு வர்றேன் என்று வேலை தேடி போனவள் ஒரு வேலையும் பெற்று கொண்டாள் போலீஸ் வேலையில் நீடித்தால் அவன் கண்டிப்பாக கண்டு பிடித்து விடுவான் அதனால்தான் கிருத்திகா விவரமாக மாற்று வேலை தேடினாள்...
ஆனால் இங்கோ அன்பு தாயில்லா பிள்ளை போல தவித்து போனான் தாடியை வளர்த்து கொண்டு அவளையும் பிள்ளையையும் தேடாத இடம் இல்லை அத்தனை பேர் போன் நம்பர் முதற்கொண்டு மாற்றி வைத்திருக்கவும்...
அடம் பிடிச்சவ சொன்ன மாதிரியே என்ன விட்டுட்டு போயிட்டா நீ போனா நான் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்குவேன்னு தப்பு கணக்கு போட்டுட்ட போல உலகத்தில நீ எந்த மூலைக்கு போனாலும் நான் நேடி வரவேன்டி இல்லை உனக்காக காத்து கிடப்பேன்டி நீ என்ன கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கலைன்னாலும் உனக்கு பாதுகாவலனா கடைசிவரை இருப்பேன்... என்று அவளை ஆற்றாமையில் திட்டி தீர்த்தான்..
உடல்கள் இணைவது திருமணமா இல்லையே மனங்கள் இணைவதுதானே திருமணம் ...அதை கிருத்திக்கா எப்போது புரிந்து கொள்ள போகிறாள் அந்த நாளுக்காக காத்திருந்தான்...... ஆனால் பெரியவர்களுக்கு உள்ள பொறுமையும் நிதானமும் குழந்தைகளுக்கு இருக்காதே .... அன்புவை காணாத ஏக்கத்தில் ஜூரத்தில் விழுந்து விட்டான் மூன்று நாளாக ஊசி போட்டும் காய்ச்சல் சரியான பாடில்லை...
அத்தை எனக்கு பயமா இருக்கு... கைகால் உதறியது கிருத்திக்காவுக்கு..மகன் கண்ணை மூழிக்காது கிடந்தான்... டாக்டர் அவளை அழைப்பதாக நர்ஸ் வந்து கூப்பிடவும் ஓடி போனாள்...
வாங்கம்மா உட்காருங்க..
இருக்கட்டும் சார் பாலாவுக்கு மூணு நாளா காய்ச்சல் குறைவே இல்லையே...
அவனுக்கு உடம்புக்கு நோய்னா மருத்துவன் கொடுக்கலாம் ஆனா அவனுக்கு நோய் உடம்புல இல்லை மனசுல...
புரியலையே...
அன்பு யாரும்மா...
அது அது அவனோட...
அப்பான்னு சொன்னான்.. உங்க கணவர் வேற நாட்டுல எங்கேயும் இருக்கிறாரா ... அப்பாவை பார்க்க ஏங்கி போயிட்டான்.. அந்த அன்பு வந்தா தானா காய்ச்சல் பறந்து போகும்...
அது அவர் வர முடியாதே டாக்டர்...
அப்போ உங்க குழந்தையை மறந்துடுங்க..
சார்இஇஇஆஆ
எஸ் உங்க குழந்தை கண்ணை திறக்கணும்னா அந்த அன்பு வந்தே ஆகணும் இல்லை ஒன்னும் பண்ண முடியாது ...
வேற வழி இல்லையா ?
அவனோடு மூளை, மனசு எல்லாம் அந்த அன்புவோட பாசத்துக்கு அடிமையாகி இருக்கு.. கிட்டத்தட்ட போதை மாதிரி.. அவன் ஏதிர்பார்த்த அன்பு பாசத்தை அவர்கிட்ட வாங்கியிருக்கான் இப்போ இந்ந பிரிவை அவனால தாங்க முடியல பெட்டர் அவர வர சொல்லுங்க இல்லை எங்களால காப்பாத்த முடியாது...பேச்சற்று போய் நின்றாள்....வெளியே வந்து லட்சுமியிடம் விஷயத்தை கூறிட அவர் பொங்கி விட்டார்...
போதுமா கிருத்திகா நீ வீம்பு பிடிச்சி உன் பிள்ளையை எந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டேன்னு பாத்தியா
அத்தை பாலா பாலா பேச்சு வரவில்லை அவளுக்கு...
நான் தெரியாமத்தான் கேட்கிறேன் யாருக்கும்மா பயந்து ஓடுற அவருக்கா இல்லை உனக்கா...
அத்தை நான்...
உனக்கு பயம் எங்க அவர் முன்னாடி இருந்தா அவருடைய காதல் காந்தம் போல உன்ன இழுத்துடுமோன்னு பயம்...
காதலிக்க தகுதி வேண்டாமா அத்தை.. என் வாழ்க்கை முடிஞ்சி போச்சி அத்தை...அவருக்கு நான் தகுதி இல்லை
இல்லம்மா தப்பா புரிஞ்சிக்கிட்ட ...கோலத்துக்கு புள்ளி வேணும்னா பாஸ்கர் போட்டதா இருக்கலாம்.. ஆனா அந்த கோலத்துக்கு வண்ணம் கொடுக்க போறது அன்புவா ஏன் இருக்க கூடாது...
உலகம் அசிங்கமா பேசும் அத்தை...
என்னம்மா பேசும் நடத்தை கெட்டவள் சொல்லிட்டு போகட்டும்... அவங்களா உன் வாழ்க்கையை வாழ போறங்க இல்லயே.. நீ கஷ்டப்படும்போது உனக்கு துணை வர போறாங்களா.. பார்த்ததான ஒரு வீடு கூட நம்மள நம்பி தர மாட்டேங்குறாங்க ..நீ என்னதான் நான் நல்லவ நல்லவன்னு கூவிக்கூவி சொன்னாலும் ஒரு பையன் நம்ப போறது கிடையாது.. பிறகு எதுக்கு நீ இவர்களுக்காக உன் வாழ்க்கையை தொலைச்சிட்டு நிற்க பார்க்கிற
அத்தை நீங்களா இப்படி பேசுறீங்க.. நான் உங்க மகனோட மனைவி... என்ன போய் வேற ஒருத்தரை கல்யாணம் கட்டிக்க சொல்றீங்க.. எப்படி முடியும்
ஏன் முடியாது .. இல்லை ஏன் முடியாதுன்னு கேட்கிறேன் .. பாஸ்கர் உயிரோட இருந்திருந்தா இல்லை அவனுக்கு ஏதோ ஒரு ஆக்சிடெண்டில் கையும் காலும் இழுத்துக்கிட்டு கிடந்திருந்தாக்கூட உனக்கு வேலியா ஒரு தாலியும், உறவா ஒரு புருஷனும் இருக்கான்னு, நான் உன் வாழ்க்கையில் தலையிட்டிருக்க மாட்டேன்.. உன் வயசு பொண்ணு பொட்டும் பூவோடும் பட்டு சேலையில் சுத்தி சுத்தி வரும் போது.. நீ மட்டும் வெளிறிய சேலையில போவ பாரு.... நான் பெத்த மகளா இருந்திருந்தா இப்படி விட்டிருப்பேனான்னு ஒவ்வொரு நாளும் என் மனசாட்சி என்னை காயப்படுத்துதே அது உனக்கு தெரியுமா? ராத்திரி இந்த பொண்ணுக்கு என்ன நியாயம் செய்யப் போறேன்னு உன்ன நெனச்சு நெனச்சு தூக்கம் போகுதே அது உனக்கு தெரியுமா? என் காலத்துக்குப் பிறகு இவளும் , புள்ளையும் என்ன பாடு படப் போறாங்கன்னு நினைச்சே நோயை இழுத்துகிட்டு இருக்கேனே அது உனக்கு எப்படி புரிய போகுது... உனக்கு எல்லாம் தெரியும் ஆனாலும் பிடிவாதம்... இந்த உலகத்துல யாருமே செய்யாததையா நீ செய்யப்போற.. இல்ல இதுவரை நடக்காததையா பண்ண போறே.. உன் வாழ்க்கை நீ தான் வாழனும்.. நாலு பேரு நாலு விதமா சொல்லத்தான் செய்வாங்க.. அவங்களுக்கு வேற வேலை இல்ல.. இன்னொரு பெரிய விஷயம் நடக்கும்போது உன் விசயத்த மறந்துட்டு.. அந்த விஷயத்தை பின்னாடி ஓடிடுவாங்க... அவ்வளவுதான் அவங்க குணாதிசயம்.. அவர்களுக்காக நீ இப்படி தனிமையை போர்வையா பொத்திக்கிட்டு எத்தனை காலத்துக்கு இருக்க போற.. பாஸ்கர் உனக்கு நல்ல கணவன்தான் இல்லன்னு சொல்லலை... ஆனா அவன் உயிரோட இருந்திருந்தாகூட உன்ன மாதிரி ஒரு பொண்ணு இப்படி நிற்கதியா நின்னிருந்தா.. கண்டிப்பா அன்பு எடுத்த அதே முடிவுதான் அவனும் எடுப்பான்..
நீங்க சொல்ற மாதிரியே நான் கல்யாணம் கட்டிகிட்டாலும் என்னால எப்படி அத்தை அவர்கூட வாழ முடியும்.. நான் ஏற்கனவே உங்கள் மகன் கூட வாழ்ந்து முடிச்சவ
கல்யாணமுங்கிறது வெறும் தாம்பத்யம் மட்டும் கிடையாது கிருத்திகா.. அதை நீ நல்லா புரிஞ்சுக்கோ.. ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுப்பதும், அன்பை பரிமாறிக் கொள்வதும் உனக்காக நான் இருக்கேன்னு சொல்றதும்.. இக்கட்டுல தோள் கொடுக்கிறதும்தான் உண்மையான தாம்பத்தியம்.. அது அன்பு கிட்ட நிறையவே இருக்கு.. மாற வேண்டியது அவன் இல்ல நீ ... எங்கோ இருந்து மாற்றம் ஆரம்பிக்கணும்னு காத்துக்கிட்டு இருக்குறதுக்கு.. அந்த மாற்றம் ஏன் உன்கிட்ட இருந்து உருவாகக் கூடாது? தெளிவா யோசிச்சு ஒரு முடிவெடு..அன்பு வேணும் வேண்டாம் இந்த இரண்டு 2 முடிவு உன் முன்னாடி.. எதுவாயிருந்தாலும் எனக்கு சந்தோஷம்., உன் பிள்ளையை காப்பாற்றுவதற்காக மட்டும் நீ அன்பு கூப்பிடாத .. அதுதான் நீ செய்யக்கூடிய மிகப்பெரிய பாவமாக இருக்கும்....
எத்தனை மாமியார்கள் இவர்போல் தன் வீட்டிற்கு வந்த பெண்களை தன் மகளாக பார்க்கிறார்கள்.. அவர்களுக்காக பரிதவிக்கிறார்கள்.. கண்டிப்பாக லட்சுமி அன்பான மாமியார்தான்..கிருத்திக்காவுக்கு கடவுள் சிறுவயதில் பல சோதனைகளை கொடுத்தாலும் அவளை சுற்றி சில நல்ல உள்ளங்களையும் கொடுத்திருக்கிறார் அதில் ஒருவர்தான் லட்சுமி....
அன்புவின் காதலை ஏற்க வஞ்சி மனம் அஞ்சி நின்றது இனியாவது ஏற்குமா?
12
தன் மகன் பாலா படுக்கையில் படுத்திருக்க .. அவன் பக்கத்தில் தலை சாய்ந்து படுத்திருந்தவள்.. மூளை மட்டும் தூங்காது விழித்திருந்தது .பலத்த யோசனை மகனை காப்பாற்றுவதற்காக அன்புவை அழைக்கவா? அழைத்தால் அடுத்த நிமிஷம் ஓடோடி வந்து தன் முன்னால் நிற்பான் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும் .. கிருத்திகா அவனை திருமணம் நான் செய்ய மாட்டேன் என்று மறுத்தால்கூட அவளுக்கான கடமைகளைச் செய்ய அழைத்த குரலுக்கு செவிசாய்க்க மறுக்க மாட்டான்... என்பதும் மறுக்க முடியாத உண்மை ஆனால் லட்சுமி சொன்னது போல அவனனை விட்டு விலகி வந்ததற்குப் பிறகு.. ஒன்று அவனை தன் வாழ்க்கையோடு இணைப்பதாக இருந்தால் அழைக்கலாம் இல்லை தன் தேவைக்கு மட்டும் அழைக்கக் கூடாது என்பது அவளுடைய முடிவு...
மகனை பார்க்க பார்க்க பயம் பிடித்து கொண்டது..அன்பு பாலாவுக்கு நல்ல தகப்பனாக இருப்பான் என்பது நூறு சதவிகித உண்மை அவளுக்கு அடாவடியோடு அன்பு கொண்ட கணவனாக இருப்பான் என்பதும் அவளால் மறுக்க முடியாத உண்மை ஆனால் ஆனால்..
இந்த இரண்டாம் திருமணம் சாத்தியமாகுமா.. தன் கையில் பாஸ்கருடைய குழந்தை இருக்கும் பொழுது அவருடன் அன்போடு எப்படி தன்னால் சந்தோஷமாக வாழ முடியும்.. முதலில் இதை என் மனம் ஏற்றுக் கொள்ளுமா? அவருடைய காதலை நான் ஏற்றுக்கொண்டு வாழ ஆரம்பித்தால் அப்போது எங்களுக்கு ஒரு குழந்தை வந்த பிறகு பாலா அதை ஏற்றுக் கொள்வானா? இப்போது அவன் சிறு பிள்ளைபோல தன் தந்தைக்காக ஏங்குகிறான்.. ஒருவேளை வளர்ந்த பிறகு நாலும் புரிந்த பிறகு.. இது தன் தந்தை இல்லை, இது தன் உடன்பிறந்த சகோதரி இல்லை அல்லது சகோதரன் இல்லை என்று நினைத்துவிட்டார் எங்களை விட்டு ஒருவேளை ஒதுங்கி நின்றுவிட்டால்.. என் அன்பு பொய் என்று நினைத்து என்னைவிட்டு விலகி விட்டால்.. உனக்காகத்தான் நான் திருமணம் செய்தேன் என்று அவனிடம் கூற முடியுமா? பிறகு அவன் என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு நான் அவனிடம் பதில் கூற முடியுமா எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கக் கூடிய காரியம் அல்ல என்பது அவளுக்கு நன்றாக தெரிந்தது...
ஆனால் அவள் யோசிக்க மகன் நேரம் கொடுக்க வேண்டுமே காய்ச்சலில் வீரியம் கூடி தூக்கி தூக்கி போட ஆரம்பித்து விட்டது அதிலும் கொடுமையாக வெட்டு வேறு வந்து விட..ஐசியு வில் வாழ்வா சாவா நிலைமையில் பாலா....
மேடம் இனி எங்களால முடியாது அரை நாள் டைம் அதுக்குள்ள அவன வர சொல்லுங்க இல்லை பையனை வீட்டுக்கு கொண்டுட்டு போயிடுங்க அதுக்கு மேல நீங்க என்ன ட்ரீட்மெண்ட் பாத்தாலும் வேஸ்ட்தான்..
ஐயோ சார் என் புள்ள எனக்கு வேணும் அவனுக்காக தான் நான் உயிரை பிடிச்சிட்டு வாழ்ந்துட்டு இருக்கேன் இப்பவே வர சொல்றேன் என அன்புவுக்கு போன் போட ஓடினாள்...
அவன் நம்பர் நினைவடுக்கில் ஏன் பதிந்தது கேட்டால் பதில் இல்லை... அவனுக்கு ரிங் போய் ஓய்ந்தது ..அவனோ படுக்கையில் விட்டத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் ..போன் அலறியது காதில் விழுந்ததாகவே தெரியவில்லை...அப்போது பார்த்து ஸவேதா கதவை திறந்து கொண்டு வந்தாள்...
மாமா .....
மாமா
அமைதி அவன்தான் இவ்வுலகில் இல்லையே பாஸ்கர் இறந்த போது எப்படி கிடந்தானோ அப்படியே அதே கோலத்தில் இருந்தான்..
மாமா எத்தனை நாள் இப்படி இருக்க போறீங்க போன் அடிக்குது எடுத்து பேசுங்க .. வேலைக்கு போங்க இப்படி அடைஞ்சு கிடைந்தா அவங்க கிடைக்க போறாங்களா .. எனக்கு என் மாமா எப்பவும் கம்பீரமாய் இருக்கணும் ..நீங்க இப்படி வீட்டுக்குள் அடைஞ்சி கிடக்கிறத, என்னால பாக்க முடியல.. என்ன கல்யாணம் கட்டிக்கலைன்னாலும் பரவாயில்லை .. நீங்க சந்தோசமா நிம்மதியா இருந்தாலே போதும் மாமா.. எனக்கு எப்போதும் உங்களோட சந்தோசமும் நிம்மதியும் தான் முக்கியம் என்னதான் இழுத்து பிடிச்சாலும் நீங்க என் பக்கத்துல வர மாட்டீங்கன்னு தெரிஞ்சு போச்சு.. சீரியல் வில்லி மாதிரி உங்களையும் அவங்களையும் பிரிச்சிட்டு அந்த இடத்தில் நான் வந்து வாழணுங்கிற எண்ணம் எல்லாம் எனக்கு கிடையாது... சொந்த அத்தை பையன் உங்க கூட வாழ்ந்த நல்லா இருக்கும்னு தோணுச்சு.. அதுவும் இப்போ நீங்க கிருத்திகா மேல வச்சிருக்கே காதலை பார்க்கும்பொழுது உங்கள மாதிரி ஒருத்தரை மிஸ் பண்றோம்னு மனசு கொஞ்சம் வலிக்கத்தான் செய்யுது.. ஆனா அந்த வலி போகப்போக ஆறிவிடும்...எனக்கு உண்டானது சாதாரண வெட்டுக்காயம்தான் ... ஆனா அவங்களுக்குள்ள இருக்கிறது தீராத வடு மரண வலி அதுக்கு மருந்து உங்க காதல் கண்டிப்பா போடும்... உங்க ண்டிப்பாக காதல் சக்சஸ் ஆகும் நீங்க கொண்டிருக்க உண்மையான காதல் என்னைக்காவது ஒருநாள் அவங்களுக்கு தெரியும்.. தேடி வருவாங்க... உங்களை ஏற்றுக்கொள்ளுவாங்க தயவுசெய்து எழும்புக மாமா அந்த போனை எடுங்க.. அன்பு போனை எடுத்து ஆப் செய்கிறேன் என ஆன் செய்து போட்டு விட்டான் அவன் பேசியது அத்தனையும் கிருத்திகா காதில் அச்சு பிசகாமல் விழுந்தது....
அவ என்ன விட்டு போனது கூட வலிக்கலை எனக்கு பயந்து ஓடுறா பாரு அது வலிக்குது என் காதல் அவளுக்கு தொல்லையா தான் தெரியுதா .. நான் எப்படி அவளுக்கு புரிய வைக்க அவளும் பாலாவும் இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே இல்லைன்னு... அவளுக்கு என்ன பிரிஞ்சி வாழ முடியும் ஏன்னா என் கீதாம்மா தைரியசாலி ஆனா நான் கோழை காதல் என்ன பலவீனப்படுத்திடுச்சி அவ முகம் பார்க்காம என்னால மூச்சு கூட விட முடியல என் பாலா சிரிப்பு சத்தம் கேட்காம எனக்கு வாழ முடியும்னு தோணல.. பேசாம என்ன கொன்னுட்டு போயிருக்கலாம் அவ..நிம்மதியா அவளுக்கு தொல்லை இல்லாம செய்தாவது போயிருப்பேன்..என்ன கிறுக்கா மாத்திட்டா, அவள பக்கத்துல வந்து பார்க்கும் வரை கூட சாமளிச்சேன் ஆனா எப்போ பாலா கூடவும் அவகூடவும் பேச ஆரம்பிச்சேனோ அதுக்கு பிறகு அவ இல்லா முடியல... இவதான் என்ன தேடலை நான் வேண்டாம்.. என் மகன் என்ன தேடுவானா ஸ்வேதா ஹீரோ ஹீரோ சுத்தி சுத்தி வருவான் இதோ இந்த தோள்ல தூக்கம் வந்ததும் கொட்டாவி விட்டுட்டு முகத்தை துடைப்பான் படிச்சா பாவமா என் முகம் பார்பான் விளையாடும் போது என்ன மாதிரியே சிரிப்பான் கோவம் வரும் போது நான் பல்லை கடிக்கிற மாதிரி கடிப்பான் தெரியுமா நாள் புல்லா என் புள்ளையை பார்த்திட்டே இருக்கலாம் எங்க இருக்கானோ நான் இல்லாம தேடி இருப்பானா ...
என் மாமா உங்க டிபார்ட்மெண்ட்ல எங்க இருக்காங்கன்னு கேட்டுற வேண்டியதுதான..
மேடம் எனக்கு போற இடம் தெரிஞ்சிடும்னு வேலையை ரிசைன் பண்ணிட்டாங்க ..அழுத்தக்காரி, அகம் பிடிச்சுக் கழுதை, அழகு ராட்சசி, என்ன உயிரோட கொல்ற என் அழகு தேவதை அவள காதலிச்சிட்டு இருக்கிறதே போதும்ங்கிற அளவு காதல் கீதாம்மா மேல அன்புவின் முகம் அத்தனை காதலை வெளிப்படுத்தியது...
இப்படி எல்லாம் செல்லும் போது பொறாமையா இருக்கு மாமா...
அவ கூட ஊரே பொறாமை படுற அளவு வாழணும்னு ஆசையா இருக்கு தினம் ஒரு சண்டை அவ சிடுசிடு முகத்தை பார்கிறதுக்காவே பொய்யா போடணும்... ஏதாவது தெரியாம செஞ்சுட்டு அசடு போல சிரிப்பா பாரு அப்படியே அந்த கோலி குண்டு கண்ணுல முத்தம் கொடுக்க தோணும்... சின்சியரா வேலை செய்யும் போது உதட்டை கடிப்பா பாரு ப்பா சான்சே இல்லை...மூணுமுணுன்னு சாமி கும்பிடுவா பாரு சோறு தண்ணீ இல்லாம அவள மட்டும் பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கும்....
ஆக கிருத்திகாவ தவிர பொண்ணே இந்த உலகத்தில இல்லைங்கிற அளவுக்கு காதலிக்கிறீங்க...
காதலே பொறாமை படுற அளவுக்கு காதலிக்கணும் வாழ ஒரு வாய்ப்பு தந்தா வரமா வந்த அவள தேவையா வச்சி வாழ்வேன் ஆனா இதய வாசலை அடைச்சி வச்சிருக்காளே ...
விடுங்க மாமா இந்த காதல் கண்டிப்பா அவங்கள போய் சேரும் .. ஓடி வருவாங்க ....
ம்ம் ...சரி ஸ்வேதா நீ போ நான் ரெயில்வே ஸ்டேஷன்ல லிஸ்ட் கேட்டிருந்தேன் ஒரு எட்டு பார்த்திட்டு வந்திடுறேன்...
சரி மாமா நான் இன்னைக்கு ஊருக்கு போறேன்
போயிட்டு வாறேன் சொல்லு...உனக்கு தோழனா எப்பவும் நான் இருப்பேன் ..
சரிங்க தோழரே என சிரித்து விட்டு கிளம்பி விட்டாள்....
சீசீ இந்த பழம் புளிக்கும் என நினைத்து விட்டாள் போல அவனை கனிய வைக்க முடியாது தொல்லை கொடுக்காது விலகி கொண்டாள்.....
போனில் அன்பு காதல் மொழிகளை கேட்டவள் எப்படி உண்ர்ந்தாள் என்பது அவளுக்கு தான் வெளிச்சம்... முகத்தில் அலைகழிப்பு நீங்கி அமைதியின் சாயல் .. மறுபடியும் போன் போட்டாள்....
பாஸ்கரோடு கொண்ட வாழ்க்கை பாதியில் பாதை மாறி போனது இனி வரும் வாழ்க்கை பாதை துணையாக அன்புவை ஏற்று கொள்வாளா?....
13
ஹலோ யாருங்க??
அமைதி அவளிடம்...மூச்சு சத்தம் மட்டும்....அது போதுமே அவளை கண்டறிய அவள் வெட்டி போட்ட நகத்தை கூட கண்டுபிடித்து விடுவானே?
கீதாம்மா.....ஆச்சரியம் அவளுக்கு எப்படி எப்படி இவை எல்லாம் சாத்தியம் தொண்டை அடைத்தது உடலில் ஒரு சிலிர்ப்பு வந்து அடங்கியது பூனை முடி கூட எழுந்து நின்றது புதுவிதமான உணர்வு கை வியர்த்தது உள்ளம் படபடத்தது..
கீதாம்மா எங்கடா இருக்க குரலில் காதலை கூற இயலுமா .. முடியும் என்று நிருபித்தானே..
பாலாவுக்கு...
பாலாவுக்கு என்னடா கண்ணா.. பதறியது அவன் குரல்..அந்த குரல் கண்டு என்ன நினைத்தாளோ...
உங்க மகனுக்கு உங்கள பாக்கணுமாம்... மூச்சு பேச்சில்லாம கிடக்கிறான் அவன் காதலை ஏற்று கொண்டதை இதைவிட நளினமாக யாரும் கூற முடியுமோ..
என்னடி ஆச்சி விவரமா சொல்லி தொலடி.. இப்ப நீ எங்க இருக்க... மூன்று முடிச்சு போட்டவன் போல உரிமை வந்தது
பெங்களூர்ல ..அவனுக்கு உங்கள பார்காம காய்ச்சல் வந்திடுச்சி டாக்டர் நீங்க வந்தாதான் கண்ணு முழிப்பான் காப்பாத்த முடியும்னு சொல்றாங்க... விவரம் கூறினாள் கோவம் கொண்டவன்
கூறுகெட்டவளே இப்படி இழுத்து வச்சிருக்க எப்படி என் பிள்ளை தாங்கிச்சோ இருக்கிற கோவத்துக்கு வந்தேன்னு வை அறை வாங்கிடுவ..வை அடுத்த ப்ளைட்ல வர்றேன் அப்படி என்னடி உனக்கு பிடிவாதம் வை வந்து உன்ன வச்சிக்கிறேன் என கையில் கிடைத்ததை அள்ளி கொண்டு ஓடிவந்து விட்டான்....
ஹாஸ்பிட்டல் அறைக்கு வெளியே லெட்சுமி அமர்ந்திருக்க..யாரையும் எட்டி பார்க்காது தடுத்த டாக்டரிடம்...
நான் அன்பு ஐபிஏஸ் தமிழ்நாடு என தன் ஐடியா காட்டினான்..
வாங்க சார் நீங்கதானா..
என் மகனுக்கு என்ன..
ஒன்னும் இல்லை சார் நீங்க பேசினா சரி ஆகிடுவான்...
பாக்கலாமா.. என்று கேட்டுகொண்டே உள்ளே போய்விட்டான்
தாராளமா போய் பாருங்க என்றுவிட்டு லட்சுமியை பார்த்து டாக்டர் மெல்ல சிரித்தார் கையெடுத்து கும்பிட்ட லெட்சுமி கண்ணில் ஆனந்த கண்ணீர்..
நாங்களும் மனசுங்கதான் எங்களால ஒரு குடும்பம் சேர்ந்தா சரிதான்..
ரொம்ப நன்றி விஷயத்தை சொன்னதும் ஒத்துகிட்டு அதுக்கு தகுந்தார் போல சொன்னதுக்கு
நான் பொய் சொல்லலை உண்மையாவே உங்க பேரன் நிலைமை மோசமாதான் இருந்தது டிரிட்மெணட் கொடுத்தாலும் அவர பார்தாதான் முழுமையா குணம் அடைவான் அதான் சொனனதும் சரின்னு அவங்ககிட்ட கிரிட்டிக்கல்னு சொன்னேன்...
அச்சோ இனி ஒன்னும் இல்லையே..
இல்லை ஓடி ஆடி கூட விளையாடலாம்... உலகத்தில் தீமை செய்ய ஒருசாரார் இருந்தால் பிரதிபலன் பாராது நன்மை செய்யம் நல்லுள்ளங்களும் இருக்கதான் செய்கின்றனர்...
படுக்கையில் வாடிய வெற்றிலை கொடியாக கிடந்த தன் மகன்தான் முதலில் பாலா கண்ணுக்கு தெரிந்தான் ....
ஜூனியர் என் ஜூனியருக்கு என்ன ஆச்சி என்ற குரல் பாலா செவியை நிறைக்கவும்..
அப்பா ஆஆஆஆஆ என்றான் கண்களை திறந்து பிள்ளை பெக்கும் பொழுது சேயின் அழுகுரல் எத்தனை இன்பத்தை தருமோ அவள் இன்பம் அவனுக்கு முதல் முதலாக அப்பா என்ற வார்த்தையை அவன் வாய்வழியாக கேட்கிறான் அழுகை வந்தது கண்ணை தாண்டி கண்ணீர் வர பார்த்தது புதிதாக பிறந்தது போல் இருந்தது அள்ளி அணைத்து கொணடான் பாலாவை மார்போடு...
இன்னொரு தடவை அப்பான்னு சொல்லுடா..
அப்பா எஙகப்பா போனீங்க...
எங்கடா போயிட போறேன் உங்கள விட்டுட்டு விரட்டி விட்டாலும் வருவேன்டா என்றான் அவன் தலையை தடவி விட்டபடி...
அம்மா நீங்க வர மாட்டிங்க உங்கள பாக்கவே முடியாது நீயும் போகவே முடியாது சொன்னாங்க..
அவ கிடைக்கிறா அவளுக்கு நம்ம மேல பொறாமைடா அதான் கண்டத்தையும் சொல்லுவா...
ஆமா அப்பா அப்படிதான் உங்கள திட்டினாங்க பேர்தான் அன்பு பண்றது புல்லா வம்புன்னு திட்டோ திட்டு...
அப்படியா சொன்னா வீட்டுக்கு போனதும் முழங்கால் போட வச்சிடலாம்..
வேணாம் அப்பா நீங்க பெரிய துப்பாக்கி ஒன்னு வச்சிருப்பீங்கல்ல அதை வச்சி சுட்டிறலாம்...
அப்படியா சொல்ற ஆனா பாவமே அவளுக்கு நம்மள விட்டா யாரும் இல்லையே அதனால பொழச்சி போகட்டும் விட்டிறலாம் ஓகேவா ஜூனியர்....
ம்ம் ஓகேதான் ஆனா மறுபடி உங்கள திட்டினா கண்டிப்பா சுடணும்..
இது டீல் மகனே பண்ணிடலாம்..
போதும் போதும் என்ன சுட ஐடியா போட்டது அவன் இன்னும் எதுவுமே சாப்பிடல இந்தாங்க கொடுங்க கிருத்திகா பாலை ஆற்றி அன்பு கையில் கொடுக்க அப்போதுதான் கிருத்திகாவை பார்த்தான்... பார்த்தவிழி பார்த்தபடி பூத்து கிடக்க இருவர் விழியும் ஒன்றாக கலந்தது அவன் சுவாசம் படும் தூரத்தில் அவள் சேலை அவன் மீது மெல்ல சந்தன காற்றை சாளரம் வழியே வீசுவது போல சாமரம் வீசிச் செல்ல ஆழ்ந்து சுவாசித்தான்... சாக கிடப்பவனுக்கு உயிர்க்காற்று போல அவனுக்கு உயிர் கொடுத்தது .. என்ன என அவள் மீன் விழிகள் ஏறி இறங்கியது...
கொடுங்க பசிக்கும் என்று அன்பு கையில் கொடுக்கவும் வாங்கி மகனை தூக்கி மடியில் வைத்து கொண்டு அருந்த கொடுத்தான்..கிருத்திகா இன்னொரு கிளாஸில் பாலை ஆற்றி கொண்டு வந்து அவனுக்கு கொடுக்க...
போதும்டி ஒரே நாள்ல குண்டாகிடுவான் என் புள்ள...
ப்ச் இது உங்களுக்கு...
எனக்கா நான் சாப்பிட்டுட்டுதான் வந்தான்..
ஆமா கஇடா விருந்து தின்னுட்டு வந்தது தெரியும் அதான் முகத்தை பார்த்தாலே தெரியுதே பஞ்சததில அடிப்பட்ட காக்கா மாதிரி ...
யாருடி காக்கா நான் உன்ன விட கலர் கம்மி அவ்வளவுதான்... பாலாவே சிரித்து விட்டான் ..
அப்பா இது கொஞசம் ஓவர்ப்பா நீங்க கருப்பு....
போலீஸ் வேலைக்கு போய் கருப்பாகிட்டேன் மகனே நம்புடா...
நம்பிட்டோம் என தாயும் மகனும் ஒரே போல இழுத்து சொல்லவும் பேரனை பார்க்க உள்ளே வந்த லெட்சுமி அசப்பு இல்லாமல் கண்களை துடைத்து கொண்டு வெளியே போய் விட்டார்....
பாலை குடிங்க ஆறிட போகுது....
கொணடாங்க மேடம் நான் பஞ்சத்துல அடிப்பட்ட காக்காதான் ஆனா நீங்க பஞ்சத்துல அடிபட்ட கொக்கு போல இருக்க..சாப்பிட்டியா இல்லையாடி கண்ணு எல்லாம் உள்ள போயி இருக்க என அவளுக்கு பாதியை இன்னொரு கிளாஸில் ஊற்றி கொடுக்க வேண்டாம் என தலையாட்டி மறுத்தாள்...
ஏன் ...
நீங்க குடிச்சிட்டு தாங்க..தலையை குனிந்து கொண்டாள்...ரசனையாக அவளை பார்த்தவன் குடித்து விட்டு அவளுக்கு கொடுக்க அதை வாங்கி அவன் எச்சில் பட்ட இடத்தில் தன் சிற்பி உதட்டை வைக்கவும் அன்புவுக்கு ஜிவ்வென இருந்தது...
அம்மா வாய் தொடச்சி விடுங்க என பாலா கேட்கவும் தன் முந்தானை எடுத்து அவன் வாயை துடைத்தவள் அவளையே ஏக்கமாக பார்த்து கொண்டிருந்த அன்புவை கண்டு என்ன நினைத்தாளோ அவனுக்கு துடைத்து விடவும்....
ஆத்தா நான் பாஸ் ஆகிட்டேன் என் பொண்டாட்டி மனசு மாறிட்டா என கத்தினான்...அவன் வாயை விழிந்து பொத்தியவள்...
ஐய்யோ என்னங்க யாராவது கேட்டா சிரிக்க போறாங்க..முதல்ல போய் இந்த பூச்சாண்டி வேஷத்தை கலைச்சிட்டு வாங்க போலீஸ் மாதிரியா இருக்கிங்க பிள்ளை பிடிக்கிறவன் மாதிரி...
என் பொண்டாட்டிக்கு தாடி பிடிக்கலையா...
எனக்கு என் புருஷன் எப்பவும் டிப்டாப்பா கீதா ன்னு மிரட்டுவீங்களே அதுதான் பிடிக்கும் அவனுக்கு மட்டும் கேட்டும் குரலில் சொல்லவும்...
வீட்டுக்கு போய் பண்ணிடவா இல்லை இங்கேயே சேவ் பண்ணிட்டு வரணுமா..
வீட்டுக்கு போனதும் பண்ணினா போதும்...
சரி இருங்க நைட்டுக்கு ஏதாவது சாப்பாடு வாங்கிட்டு வர்றேன் ...என இருவரையும் வைத்து விட்டு வெளிய ஆதரவு இல்லாதவர் போல சேரில் தலை சாய்த்து படுத்திருந்த லெடசுமியை எழுப்பினான்..அவருக்கு இருந்தது பாஸகர் அவன் போன பிறகு மருமகளும், பாலாவும் இப்போது அன்பு அவளை கட்டி கொண்டாள் இனி தனக்கென ஆள் இல்லை என்பது தெரிந்து தானே தன் மருமகள் மறுவாழ்வுக்கு துணிந்து நின்றது....
அம்மா..
ஹாங் வாங்க தம்பி.... என கண்ணை திறந்தார்...
உங்ககிட்ட பேசணும்...
ஒன்னும் பிரச்சனை இல்லை தம்பி உங்க கல்யாணம் முடிஞ்சதும் நான் ஏதாவது முதியோர் இல்லத்தை போய் தங்கிக்கிறேன் எப்போவாவது தூரத்தில இருந்து என் மருமகளையும் பேரனை காட்டினா கூட போதும்ய்யா...சாகும் வரை அதுக முகத்தை பார்த்துட்டே போயிடுவேன்....
உங்களுக்கு இந்த மகன் வேண்டாம் ஆனா எனக்கு இந்த அம்மா வேணுமே என்ன பண்ணலாம்...
எய்யா...
என்ன மகனா தத்தெடுத்துக்கிறீங்களா...
தம்பி என்னய்யா நீ என் வயித்துல பிறக்கலைன்னாலும் நீ மகன் தான்...
அப்போ மகன் நான் உயிரோட இருக்கும் போது நீங்க எப்படி முதியோர் இல்லம் போறேன்னு சொல்லலாம்...
அது நீ தங்கம் தான் ஆனா உங்க வீட்டுல..தயங்கினார்...
அவங்களுக்கு நான் மகனே இல்லையாம் கீதா கல்யாணம் கட்டினா சொத்துல எதுலயும் உரிமை கிடையாதுன்னு சொன்னாங்க.. கையெழுத்து போட்டு கொடுத்துட்டு வந்துட்டேன் எனக்கு அம்மாவா என் பொண்டாட்டிக்கு மாமியாரா.. என் பிள்ளைக்கு பாட்டியா கடைசி வர எங்கூட இருக்கிங்களா...
இத விட எனக்கு என்னைய்யா வேணும் என் காலத்துக்கும் உங்ககூடவே இருக்கேன் என்று பூரித்து போனார்..அவர் மட்டுமா தன் அத்தையை கூப்பிட வந்தவளுக்கும் சந்தோஷத்தில் கண் கலங்கியது..... இவனே சிறந்த ஆண்மகன் ... என்று மனமார அவனை தன் உயிரில் பாதியாக ஏற்று கொண்டாள்.....
சாப்பாடு வாங்கிட்டு வந்தவன் லட்சுமியை கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டு இரவு மகனுக்கு துணை வந்துவிட்டான் காலை டிஸ்சார்ஜ் என சொல்லியிருந்தால் கிருத்திகாவும் அவனும் இருந்து கொண்டனர்....
அப்பாவிடம் ஒரே அரட்டை கச்சேரிதான் பாதி அவளை வைத்து கேலி செய்வதும் சண்டைக்கு இழுத்து விளையாடி என பொடியன் தூங்கி விடவும் படுக்கையில் சார்ந்திருந்த அன்பு அருகில் தயங்கி தயங்கி வந்தால் இவ்வுளவு நேரம் இல்லாத தயக்கம் இப்போது வந்தது.. அருகில் உட்காரவா வேண்டாமா என பட்டிமன்றம் வைத்து கொண்டிருந்தவளை இழுத்து தன் நெஞ்சில் போட்டு கொண்டவன் அவள் திடுக்கிட்டு முழிக்கவும்...
செம டையர்டா இருக்கடி பாத்தாலே தெரியுது தூங்கு காலையில பேசிக்கலாம் என்று அவள் தலையை கோதி விட...அவள் சாய ஒரு இடம் அதுவும் அவளுக்கான இடம் கிடைத்து விட்ட நிம்மதியில் எட்டி அவன் முகம் பாரத்தாள்..அவன் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டவன்...
இந்த அன்பும் காதலும் எப்போதும் மாறாது... நீ என் மேல வச்ச நம்பிக்கையை என் உயிர் உள்ளவரை காப்பாத்துவேன்.. தூங்கு..என்று அவள் இமையில் முத்தமிட்டான்...
முத்தத்தில் காமம் கண்டவன் காமுகன் முத்தத்தில் காதல் கண்டவன் காதலன்... முத்தத்தில் தன் உயிரை கண்டவன் உயிரானவன்.....
14
பாதி இரவில் கண் முழித்தாள் கிருத்திகா இவள் ஒரு நெஞ்சில் படுத்திருக்க பாலா ஒரு புறம் கட்டி கொண்டு படுத்திருந்தான்... அவள் வெட்கம் கொண்டு விலக பார்க்கவும் அவளை நன்றாக இழுத்து அணைத்து கொண்டவன்..
தூங்குடி உருண்டு கிட்டே இருக்காத என் மகன் முழிச்சிட போறான் குசகுசுவென அவள் காதில் கூறினான்....
விடுங்க நான் அந்த சேர்ல போய் உட்காருறேன் நீங்க வசதியா தூங்குங்க..
நீ பக்கத்துல இல்லாம எனக்கு ஏதுடி தூக்கம் படு..
இல்லை உங்க அம்மா அப்பா எத்துக்கலையே அப்போ எப்படி ....
உன்ன மதிக்காத யாரும் எனக்கு எப்பவும் தேவையில்லை எனக்கு நீ உனக்கு நான் நமக்கு பாலா போதாதா...
அது எப்படி அவங்க பாவம்ல ...எட்டி அவன் முகம் பாரத்தாள்...அவள் முகம் காண நந்தியாக கிடந்த கார்கூந்தலில் ஒரு கற்றையை எடுத்து காது பக்கத்தில் சொருகி கொண்டே...
என் பொண்டாட்டியும் பிள்ளையும் பாவம் இல்லையா...
இன்னும் தாலி கட்டலை அதுக்கு முன்ன பொண்டாட்டியா...
நீதான் என் சரிபாதின்னு எப்போ முடிவெடுத்து உன்ன தேடி வந்தேனோ அப்பவே நீ என் பொண்டாட்டி தான்டி என அவள் நெற்றியில் முட்டினான்...
நான் என்ன சொல்றேன்னா ...
நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் அவங்களுக்கு மகன் வேணும்னா உங்களோட ஏத்துக்கட்டும் இல்லை அவங்க போக்குல போகட்டும் என் கடமையை காலம் உள்ளவரை மகனா செய்வேன் போதுமா...
பச் நான்தான் பிரிச்சிட்டேன்னு சொல்லுவாங்க....
சொன்னா சொல்லிட்டு போகட்டும் .. நான் தெளிவா இருக்கேன் தயவு செஞ்சி நீ கொழப்பாதடி இப்பதான் நிம்மதியா இருக்கேன் ... ஆசை பொண்டாட்டி சும்மா நச்சுன்னு நெஞ்சில படுத்திருக்க அத அனுபவிக்க விடுடி ...
ம்க்கும் விடுங்க... என்று குதித்து எழும்ப போனாள்.... அவளை அமுக்கி பிடித்து கொண்டவன்...
இனி விடவா போறேன் நீ வேண்டாம்னு சொன்னாலலே விட மாட்டேன் என்று மறுபடியும் அவளை சாயத்து கொண்டவன்...
மூணு நாள் கழிச்சி சிம்பிளா கல்யாணம் பண்ணிக்கலாமா...இல்லை உனக்கு டைம் வேணுமா கீதாம்மா....
அது பண்ணிக்கலாம் ஆனா ஆனா எச்சில் கூட்டி விழுங்கினாள்...
நீ ஓகே சொல்ற வரை எதுவும் வேண்டாம்டி இந்த குட்டி குட்டி அணைப்பு சின்ன சின்ன முதத் பார்வை பரிமாற்றம் தர்ற சுகத்தை விடவா அது பெருசு ஒருவேளை உனக்கு அது வேணுடாம்னு தோணினா கூட ஓகே காலத்துக்கும் இப்படி இருக்கலாம் எனக்கு தேவை நீயும் பாலாவும் என் பக்கத்திலேயே இருக்கணும்.. என் கூட்டுக்குள்ள நீங்க இருக்கணும் அவ்வளவுதான்...
இல்லை கொஞ்சம் டைம் தாங்க நான் ஏத்துக்க...
எத்தனை வருசம்னாலும் எடுத்துக்கடி என் செல்ல பொண்டாட்டி என்று அவள் கன்னத்தில் மெல்ல முத்தமிட்டவன் மகன் அசையும் சத்தம் கேட்டு அவனை தூக்கி தோளில் போட்டு தட்டி கொடுக்கவும் கிருத்திகா சட்டென அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு பாத்ரூம் நோக்கி ஓடிவிட்டாள்...
அடியேய் பொண்டாட்டி ஒழுங்கா தந்திட்டு போடி குழந்தைக்கு சாக்லெட் கொடுத்து ஏமாத்திட்டி போறது போல கொடுத்துட்டு போயிட்டியே என்று கத்தினான்.. தலையை மட்டும் வெளிய நீட்டியவள்...
ஆசை தோசை என உதட்டை சுளித்தவளை கண்டு வாய்விட்டு சிரித்தான்.... அவள் இதழ் தொட்டு போன தாடியை சபித்தான்..
ச்சை சேவ் பண்ணியிருக்கலாம் கொடுத்ததை பீல் பண்ண முடியல முதல் வேலையா இந்த புதர்காட்டை எடுக்கணும் இனி எப்போ இந்த வாயப்பு வருமோ என முணுமுணுத்தபடி இருந்த அன்பு பக்கம் வந்த கிருத்திகா....
எனக்கு பிடிச்சா அப்பப்ப கிடைக்கும் பிடிக்கலைன்னா அடி கூட விழும்....
வாங்க மாட்டேன்னு எப்போடி சொன்னேன்... நீ அடி கடி புல் லைசன்ஸ் உனக்கு இருக்கு.. என கொட்டாவி விட்டவனை கண்டு இரக்கம் கொண்டவள்..
அவன கொணடாங்க படுக்க வைக்கிறேன்..
இருக்கட்டும்டி ...
தூங்க தான் செய்வான் இனி காலையில்தான் முழிப்பான் கொணடாங்க என பாலாவை வாங்கி படுக்க வைத்தவள் அவனுக்கு படுக்க வசதி பண்ணி கொடுக்கவும்...மறுப்பாக தலையசைத்தவன் அவளையும் அருகில் படுக்க சொல்லி மென்மையாக அவளை கட்டி கொண்டவன்....
பல வருசம் கழிச்சி நிம்மதியா தூங்க போறேன் கீதாம்மா...உன் மடியில தூங்க ஒரு வாய்ப்பு கிடைக்காதான்னு ஏங்கி கிடந்திருக்கேன் தெரியுமா...
தெரியும்...
எப்படி தெரியும் நான் சொல்லாம...
நீங்கதான சொன்னீங்க ஸ்வேதா கூட பேசும் போது கேட்டேன் அப்புறம் அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்த போதும் நீங்க சொன்னதை கேட்டேன்...
அமுக்கிணிடி நீ ... என்ன தவிக்க விட்டு வேடிக்கை பார்த்திருக்க...
அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை இரக்கத்தில வந்த காதல்னு நினைச்சேன்...அதோட இன்னொரு குழந்தை வந்துட்டா.. உங்க மனசு மாறிடுமோன்னு பயம் அதான் வேண்டாம்னு முடிவு எடுத்தேன்...
இப்போ அந்த பயம் போயிடுச்சா...
இல்லை என் புருஷன் மேல அவ்வளவு நம்பிக்கை இருக்கு என்று திரும்பி அன்புவை கிருத்திக்கா பாரத்தாள்.. அவள் இதழில் பட்டும் படமால் முத்தமிட்டவன்.....
லவ் யூ டி உனக்கு அந்த பயமே வேண்டாம் கல்யாணத்துக்கு முன்னாடி நான் ஆபரேஷன் பண்ணிடுறேன், போதுமா.. நமக்கு காலத்துக்கும் பாலா மட்டும் தான் குழந்தை ..
அச்சோ என்ன வார்த்தை பேசுறீங்க அப்படி எல்லாம் எதுவும் வேண்டாம் நான் உங்கள முழுசா நம்புறேன் எத்தனை குழந்தை வந்தாலும் உங்களுக்கு பாலாதான் முதல் குழந்தைன்னு.. ஆனா பாலா இதெல்லாம் ஏத்துக்குவானாப்பா.. நியாயமான பயம் அதை அவனிடமே கேட்டு தெளிவு பெற விரும்பினாள்.. இருவருக்குமே பாலா வேண்டும்.. அவனுக்கும் இருவரும் வேண்டுமே....
கவலைய விடு நம்ம மகனே தங்கச்சி பாப்பா வேணும்ன பிறகு அதுக்கு ரெடி பண்ணலாம் பிரச்சனை சால்வ்ட்...
அய்ய குழந்தைக்கு என்ன தெரியும் அதுவரை அய்யா சும்மா இருப்பீங்களா என்றாள் அவன் கைகள் தன் இடையில் ஊர்ந்து கொண்டிருப்பதை சுட்டி காட்டி..
ஹாஹா நான் எப்போடி சொன்னேன் சும்மா இருப்பேன்னு குழந்தை வேண்டாம்னு சொன்னேன் பட் மத்தது எல்லாம் உண்டு என்று கண்ணடிக்க அவன் நெஞ்சில் முகத்தை புதைத்து கொண்டாள்...
போதும்டி மொத்த வெட்கத்தையையும் ஒரே நாள்ல படாதடி நான் பாவம் கண்ட்ரோல் பண்ண முடியல அட்டகாசமாக சிரித்தான்..
அய்ய பையன் முழிச்சிட போறான் அமைதியா இருங்க அவளுக்கு கருகி கிடந்த பூந்தோட்டத்தில் வண்ண பூக்கள் ஒரே நாளில் கொத்து கொத்தாக பூத்தது போல் இருந்தது மனிதன் என்றாலே ஆசை கொண்டவன்தானே.. கிருத்திகாவும் ஆசை பாசம் உள்ள பெண்தானே .. இதை அவள் கனவிலும் எதிர்ப்பார்க்க வில்லை.. மறுபடி ஒரு வாழ்வு பாலைவனத்தில் நயில் நதி ஓடியது போல் மகிழ்ச்சி... பாஸ்கர் என்பவன் எப்போதும் இனியவனாக அவள் டைரியில் பொன் எழுத்து பக்கமாக இருந்து கொண்டுதான் இருப்பான்.. அவள் அன்புவை காதலை ஏற்று கொள்வதால் அவனும் வாழுவான் மகனும் தகப்பன் அன்பை பூரணமாக அடைவான்..அவளும் இழந்து போன மகிழ்ச்சியை குடும்பத்தில் பெற்று கொள்வாள் அதனால் புதிதாக ஒரு வரலாறு எழுத தன் மனதை அன்புவுக்கு திறந்து கொடுத்தாள்... இனி இவனுக்கு உண்மையாக உயிர் உள்ளவரை இருப்பாள்...
மனதில் மண்டி கிடந்த கவலையும் பாரமும் போனதில் இருவருக்கும் தானாக தூக்கம் வந்தது ..அன்பு பாலாவை தூக்கி நடுவில் போட்டு கொண்டவன் கிருத்திக்காவையும் விடாது இடுப்பில் கை போட்டு பிடித்து கொண்டு தூங்கினார்கள்.....
பேராசை கொண்டால் தான் சின்ன சந்தோஷங்கள் நிறைவு தராது...கொண்டதில் மகிழ்ச்சி கொண்டால் வாழ்வு பூரணமாகிவிடுமே..
15
மூன்று நாட்கள் கழித்து சென்னை வந்திறங்கினார்கள் இங்குதான் திருமணம் என முடிவு செய்து விட்டான்.. தன் பெற்றோருக்கு போன் மூலமாக தகவலும் சொன்னான் ... ஆனால் அவர்கள் அதை காதில் வாங்கியதாகத் தெரியவில்லை இவனும் கண்டுகொண்டதாக தெரியவில்லை வெறும் தகவலாக மட்டுமே தன் திருமணத்தை அவர்களுக்கு கூறினான் ... கூப்பிட்டால் வந்து நின்றிருப்போம் என்று அவர்களும் ... கூப்பிட்டால் வந்திருப்பார்களோ என்று இவனும் நினைத்து விடக்கூடாது என்பதற்காக இந்த சம்பிரதாய அழைப்பு ...
இரண்டு நாள் ஓய்வு எடுத்து விட்டு அருகில் உள்ள கோவிலில் தங்கள் நலம் நலம் விரும்பிகள் அன்புவின் நண்பர்களே என சில பேர் முன்னிலையில் கோவிலில் எளிதாக இனிதாக திருமணம் முடிந்தது..
மறுபடியும் தளதளவென குங்கும நிற புடவையில் அன்பு வைத்து விட்ட குங்குமம் நெற்றி நிறைந்திருக்க,தலை நிறைய அவன் வாங்கி அவனே சூடி விட்ட மல்லிகை சரம் தோளில் தவழ பார்த்த லட்சுமிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிருத்திகா முகத்திலிருநத பூரிப்பு அவள் இதயம் கூறிட இதைவிட வேறென்ன வேண்டும் என்று நிம்மதி கொண்டவர்....
பாஸ்கர் உன் ஆத்மா இப்பதான் சாந்தி அடஞ்சிருக்கும்னு தெரியும் ஏன்னா நீ என் மகன்..உனக்கு யாரும் கஷ்டப்படுறது பிடிக்காது ... கிருத்திகா சந்தோஷமா இருக்காடா... அழகான குடும்பம் கிடைச்சிருக்கு என தன் மகனோடு மனதில் பேசினார்
கிருத்திகா கூச்சத்தில் அறுவை விட்டு தள்ளித் தள்ளி லட்சுமியிடம் போய் நின்று கொண்டாலும் அவர் இருக்கும் இடம் தேடி போய் தன் கையிலேயே அவளை வைத்துக் கொண்டால் ஒருகையில் மகனையும் அவன் தூக்க மறக்கவில்லை இப்படி ஒரு குடும்பமாக மாறுவதற்கு இத்தனை பாடுகள் என்று நினைத்து அவனுக்கு சந்தோஷத்தில் மூச்சி அடைத்தது ஸ்வேதா தன் வருங்கால கணவரது வந்தாள் அன்புவுக்கு கொஞ்சம் நஞ்சம் இருந்த குற்றவுணர்வும் போய்விட்டது ...
மாமா இவர் பரத்... அப்பா பார்த்த மாப்பிளை பேசி பழகினேன் பிடிச்சது கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன்..
ரொம்ப சந்தோஷம் ஸ்வேதா உன் கல்யாணத்துக்கு பிறகுதான் கல்யாணம் பண்ணனும்னு நெனச்சேன் ஆனா என் பொண்டாட்டி மனசு எப்போ மாறும்னு தெரியாது.. அதான் அவ தலையை அசைக்கும்போதே தாலியை கட்டிடிட்டேன் என்றதும் கிருத்திகா அன்புவின் இடுப்பில் முழங்கை வைத்து இடித்தாள்..
உண்மைதானடி உனக்கு திடீர்னு மங்காத்தா வந்துடும்... எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டா.. நான் என்ன பண்றது அதான் நீ ஓகே சொன்னதும் உடனே கல்யாணம் வச்சுட்டேன்... ஏன்னா உன்னை நம்ப முடியாது பாரு என்று அவளை காலை வாரி விட்டான் ..
ஆனா மாமா நீங்கள் பொறுத்து இருந்ததற்கு கைமேல பலன்.. தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுதே உங்க ரெண்டு பேரு ஜோடிப் பொருத்தமும் அவ்வளவு பிரமாதமா இருக்கு.. பார்க்க பார்க்க என் கண்ணே பட்டுடும் போல இருக்கு .. சுத்தி போட்டுக்கோங்க என்று சகஜமாக சிரித்து கிருத்திகாவை மெல்ல அணைத்துக்கொண்டாள்.. அவர்களுக்கு இடையே அழகான ஒரு நட்பு ஒன்று உருவானது ....
அப்புறம் மாமா உங்க பொருள் ஒன்னு என்கிட்ட இருக்கு இனி அது யாருக்கும் தேவைப்படாது.. நான் வச்சிருக்கிறதுல் பிரயோஜனமும் இல்லை என்று தன் ஃபேக்கிலிருந்து அவன் போட்டுவிட்ட மோதிரத்தை ஆன்பு கையில் கொடுக்க போக, அவனோ உண்டியலை நோக்கி கண் காட்டினான் அவளும் சிரித்து விட்டு அதை உண்டியலில் போட்டவள்.. இருவருக்கும் வாழ்த்துக்களை சொல்லி விட்டு தன் வருங்கால கணவனோடு கைகோர்த்து சென்று விட்டாள்..
யாருக்கு யார் என்று கடவுள் எழுதி வைத்திருக்க சாதாரண மனிதர்கள் என்ன செய்ய முடியும்.. நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டாள் .. அதனால் ஸ்வேதாவின் வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கும்...
இரவு வேலை நெருங்க நெருங்க கிருத்திகாவுக்கு கைகாலெல்லாம் நடுக்கம் கொடுத்தது.. இது ஒன்றும் அவளுக்கு முதல் தடவை கிடையாது ஆனாலும் ஏதோ புதுப்பெண் போல பயமாக இருந்தது..அன்புவின் முகத்தை பார்க்கவே தயக்கமாக இருந்தது .. இவ்வளவு நேரம் இயல்பாக இருந்த அவளால் இப்போது இயல்பாக இருக்க முடியவில்லை லட்சுமி பாலாவை தன்னோடு படுக்க வைத்துக் கொள்வதாக சொல்ல.. அன்புவோ மறுப்பாக தலையசைத்தவன்
இன்னைக்கு மட்டும் இல்ல அம்மா எப்பவும் அவன் எங்கக்கூட தான் இருக்கணும் அவனுக்காகத் தான் நாங்க ரெண்டு பேரும் என்று தூக்கிக் கொண்டு தன் அறைக்கு சென்று விட்டான்....
அவன் சொந்த வீடு மூணு அறைகள் கீழே மட்டும்.. மேலே ஒரு கெஸ்ட் ரூம் என விசாலமாக தோட்டத்தோடு வாங்கியிருந்தான்... அவன் அறையில் உள்ளே ஒரு குட்டி அறை அதற்கும் தனியாக ஏசி.. அது அந்தரங்க அறை அவனுக்கும் அவளுக்கும் மட்டுமான சொர்க்கப்புரி... மகனை கதை சொல்லி தூங்க வைத்தவன் தூங்குவது போல் பாவ்லா செய்து கொண்டிருந்த மனைவி இடையில் போட்டான்
தூங்கிட்டியா கீதாம்மா...
ஆமாங்க என பதில் சொல்லி விட்டு நாக்கை கடித்தாள்...
ஹாஹா அப்போ தூங்கிட்ட நம்பிட்டேன்....ஏன்டி இப்படி ஏசியில வியர்க்குது...அவள் முகம் வியர்த்து வடிந்ததை துடைத்து விட்டான் ..
பாரு கீதாம்மா கிணத்து தண்ணீய யார் கொண்டு போக போறா இத்தனை நாள் காத்திருந்த என்னால இன்னும் கொஞ்சம் நாள் காத்திருக்க முடியாதா... அதெல்லாம் நடக்க வேண்டிய நேரம் நடக்கும் நீ ப்ரீயா விடு நிறைய பேசலாம் உனக்கு என்ன பிடிக்கும், எனக்கு என்ன பிடிக்கும்னு சரியா..
அப்பா நானும் அதத்தான் நினைச்சேன் ...
பேசலாம் பட் நம்ம ரூம்ல போய் என அவளை தூக்கி கொண்டு தனியறையில் விடிய விடிய பேசினர்..
இப்படியே நாட்கள் இனிமையாக போனது அவளை தாங்கி கொணடெல்லாம் இருக்க மாட்டான்.. கோவம் வந்தால் இவளும் சண்டை போடுவாள் அவ்வப்போது வேண்டுமென்றே அவளை கிளறி சண்டை வேறு போட வைப்பான்.. நாட்கள் மாதங்களாக கடக்க ஒரு மழை நாளில் லெட்சுமி பாலாவை அழைத்து கொண்டு இரவு கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட... அவளை அன்பு பார்த்த பார்வையின் அர்த்தம் புரிந்தவள்.. அவளும் வெட்கத்தில் சிவந்து போக.... இயல்பாக இருவரும் ஒருவரை ஒருவர் ஏற்று கொண்டனர் பூவிலும் மெலிதாக அவளை கையாண்டான்... அழகான இனிய இல்லறம் அங்கே உருவானது.....
காலை சிவந்து போய் வந்த கிருத்திகாவை பார்த்த லட்சுமிக்கு நூறு சதவிகித நிம்மதி அவரும் வாழ்ந்தவர்தானே.. அவருக்கும் தெரியும் அல்லவா இத்தனை நாளாக இருவரும் ஒரே அறையில் இருந்தாலும் இருவருக்கும் எதுவும் இல்லை என்பது அவருக்கு தெரியாமல் இருக்குமா...
அதனால் தான் அவர்களுக்கு தனிமை கொடுகக் எண்ணிஅவ்வப்போது பாலாவை தூக்கிக்கொண்டு எங்கேயாவது ஊர்சுற்ற கிளம்பி விடுவார் அவனுக்குத் தேவை ஏதாவது ஊர் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும் ஒன்று அன்புவுடுன் பைக்கில் முன்னால் குரங்கி குட்டி போல் உட்கார்ந்து ஊரை சுற்றுவான்... இல்லையேல் லட்சுமியின் இடுப்பில் உட்கார்ந்து கொண்டு கோவில், குளம் என்று சுற்றி வருவார்கள் ..
அன்பு வேலைக்கு கிளம்பி வர .. கிருத்திகா அவனுக்கு உணவை பரிமாறினாள்..அவளை சீண்டி சீண்டி அப்பாவும் மகனும் சாப்பிட ஆரம்பித்தனர் .. கிருத்திகாவையும் பிடித்து உட்கார வைத்து சாப்பிட வைத்து விடுவான் .. அவன் போகும் வேலைக்கு எப்போது வருவாள் என்றெல்லாம் தெரியாது எனக்காக காத்திருக்காதே என்று கூறிவிடுவான்.. வேளாவேளைக்கு சாப்பிட்டாயா என்று எங்கிருந்தாலும் போன் போட்டு கேட்டு விடுவான்....
ரகசியமாக அவள் இடை கிள்ளி ஆசை முத்தம் வாங்கி வேலைக்கு புறப்பட்டான் மகனையும் பள்ளிக்கு அழைத்து சென்றான் இப்போதுதான் பள்ளி போக ஆரம்பித்திருக்கிறான்...
இடையில் இரண்டு முறை அன்பு தாயும் தகப்பனும் தன்னோடு வந்து இருக்கும்படி கூப்பிட்டனர்? திடீரென என்ன ஞானோதயம் என்பது தெரியவில்லை.. ஆனால் அவன் மறுத்துவிட்டான்...
போலியாக கிருத்திகாவையும் பாலாவையும் ஏற்றுகொள்வது அவனுக்கு பிடிக்கவில்லை உண்மையான அன்போடு வா என்று கூப்பிட்டால் போகலாம் அப்படியே போனாலும் ஒரே குடும்பமாக இருப்பது சாத்தியம் இல்லை.. இப்படி தனித்தனியாக இருந்து கொண்டு .. அவரவர் கடமைகளை சரியாக செய்தால் போதும் என்று நினைத்தான் .. அது போல் தன் தாய் தந்தையருக்கும் பக்கத்திலேயே ஒரு வீட்டை எடுத்துக் கொடுத்து வைத்துவிட்டான் ... குடும்பமாக இவர்களும் அங்கே செல்வார்கள் அவர்களும் இங்கே வருவார்கள்..... உலகத்தில் எல்லாரையும் ஒதுக்கிவைத்துவிட்டு வாழமுடியாதே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும் போவது வாழ்க்கை.....
நான்கு வருடங்கள் கழித்து.....
அம்மா
என்னடா ஜூனியர் அம்மாவுக்கு என்ன வச்சிருக்க என்று சாப்பாடு மேஜையில் வந்து அமர்ந்தான் அன்பு..
அப்பா எனக்கு தங்கச்சி பாப்பா வேணும் என் ப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் தங்கச்சி பாப்பா இருக்கு அந்த ரோஷனுக்கு கூட இன்னைக்கு தங்கச்சி பிறந்திருக்கு எனக்கு ஷேம் ஷேமா இருக்கு...அதான் லெட்சு பாட்டி கிட்ட கேட்டேன் .. அம்மாகிட்ட கேட்க சொன்னாங்க அவங்களுக்கும் பாப்பா தூக்க ஆசையா இருக்காம்...
ஹாஹா எனக்கு ஓகேடா உன் அம்மாவுக்கு ஓகேவா கேளுடா என்றதும் கரண்டியோடு வந்த கிருத்திகா...
பாப்பா வேணுமா அத்தனை பேருக்கும் சூடு வச்சி விட்டிருவேன் சாப்பிடுங்க அவன்தான் பச்சை புள்ள தெரியாம பேசுறான் உங்களுக்கு என்ன வந்தது...
யாருடி பச்சை புள்ள என் மகனா நெவர் நேத்து இரண்டாம் கிளாஸ் படிக்கிற பொண்ணுக்கு ஐ லவ் யூ சொல்லி இருக்கான்டி அப்படிதானடா...
ஆமா அப்பா நீங்க அம்மாவுக்கு சொல்லுவிங்கல்ல அதான் நானும் சொல்றேன்.. அவ பாவம்லாப்பா..
ஆமாடா ரொம்ப பாவம் நீ சொல்லு எவன் கேள்வி கேட்க போறான் கேட்டா எங்க அப்பா சென்னை கமிஷனர் தூக்கி உள்ள போட்டிருவார்னு சொல்லு...என்று சிரித்தவன் தட்டில் தோசை பறந்து வந்து விழுந்தது..
டேய் ஜூனியர் இன்னைக்கு வார் தொடங்கிருச்சி இனி நல்லா நேரம் போதும்டா...
ஆமா அப்பா அம்மா காஞ்சனா போல முழிக்கிறாங்க...என தகப்பனும் மகனும் சிரித்து வைக்க அதற்கும் அவள் முறைத்து வைத்தாள்....
இருடா நான் உள்ள போய் தண்ணீ குடிச்சிட்டு வர்றேன்...
அம்மா கால்ல விழுந்து சாரி கேட்கதானப்பா போறீங்க நான் யாருக்கிட்டையும் சொல்ல மாட்டேன்..
டேய் அப்படியெல்லாம் இல்லடா ஜூனியர் அப்பா வீரன் உனக்கு தெரியாது..
அட போங்கப்பா அப்டித்தான் போன வாரம் வரை நினைச்சேன் அன்னைக்கு அம்மா சண்டை போட்டதும் கால்ல குப்புற விழுந்திட்டுங்க விழுந்ததுதான் விழுந்தீங்க எதிர்ல கண்ணாடி இருக்கே மகன் பார்ப்பானுக்கு அறிவு வேண்டாம் இதுல கமிஷ்னர் வேறையாம் என கெக்கேபிக்கவென பாலா சிரிக்கவும்...
மண்டை மேலிருந்த கொண்டையை மறந்துட்டேனேடா ச்சை அசிங்கமா போச்சே கீதாம்மா இனி ரூம்ல மட்டும்தான் கால்ல விழ வைக்கணும் சரியா..
அட அப்பா அப்பாவும் மகனும் நான் கொடுமைக்காரி மாதிரி பேசறது நீங்க இரண்டு பேரும் சேர்ந்து தான் என்ன ஓட விடுறீங்க அப்படிதான அத்தை...
ஆமாடி நல்லா சொல்லு என்னையும்ல இருக்க விட மாட்டைக்கிறாங்க ஒரு சீரியல் பார்க்க விடுறாங்களா இரண்டு பேரும் வீட்டுல இருந்தா சந்தைக்கடை தோத்து போகும் அத்தனை சத்தம் என்று லெட்சுமி குறைபடவும்...
பாட்டி எங்கள குறை சொன்னா கேபிளை உருவி விட்டிருவேன் ..
வாய திறக்கலடா என் நேரப்போக்கு அதுதான் நான் ஏன் வாய திறக்க போறேன்...
அது என்று வாயாடி சாப்பாட்டு முடித்தார்கள்... மகன் காரில் போய் ஏறி கொள்ள மனைவியை தனியாக பிடித்து கட்டி கொண்டவன்..
அவனுக்கு தங்கச்சி வேணுமாம்..உனக்கு ஓகேவா ..
போய்யா நான் எப்பவோ ரெடி நீங்கதான் இன்னும் ஆளே இல்லாத கடையில டீ ஆத்திட்டு இருக்கீங்க..என்று கிளுக்கி சிரித்தாள்..
அடக்கள்ளி அப்போ ஓகவா ...
டபுள் ஓகே இந்தாங்க அத்தை மாமாவுக்கு சாப்பாடு.. மாத்திரை அத்தைக்கு முடிஞ்சிருக்கும் வாங்கி கொடுத்திருங்க.... நாளைக்கு வந்து சாமியறை கழுவி விடுறேன் அவங்கள எதுவும் செய்ய சொல்லாதீங்க பாவம் முட்டு வலிக்குதுன்னு சொன்னாங்க...
சரிங்க மேடம் அவ்வளவுதானா..
அவ்வளவுதான் வேறென்ன புருவம் உயர்த்தி கேட்டாள்...
தங்கச்சி பாப்பா ரெடி பண்ண ஒரு அச்சாரம் கொடுக்கலாமே...
லாமே ஆனா இப்போ இல்லை..
இது அநியாயம்டி ஒன்னே ஒன்னு என கண் சிமிட்டிவன் கண்ணில் ஏக்கி முத்தமிட்டவள்..
காவலனே என் காதலனே!!... நீ நான் ஆகி போன மாயம் கூறடா காவலா!! என்று அவன் உதட்டை முற்றுகை இட... அவள் இதழ் காட்டில் தொலைந்து போனான் அவளின் அவன்.....
சரியாக அடுத்த பத்து மாதத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது..பாலாவை கையில் பிடிக்க முடியவில்லை அன்புவை கண்டு கொள்வதே இல்லை முழுநேரம் பாப்பாவுக்கு காவல்தான் அவன்தான் முகத்தை தூக்கி வைத்து கொண்டான் … டேய் அப்பாகிட்ட வாடா என்றால்
நான் என்ன சின்ன பையனாப்பா தூக்கி வச்சி கொஞ்ச பாப்பா நான் இல்லைனா அழுவா நீங்க அம்மாவ கூட்டிட்டு போங்க என்று விடுவான்…
என் மகன் என்ன கண்டுக்க மாட்டைக்கிறான் எல்லாம் உன் மகளால வந்தது என்று கிருத்திகாவிடம் சின்ன பிள்ளை போல சண்டைக்கு மல்லு கட்டுவான்….
அய்ய அதுகள கூட சமாளிக்கலாம் போல உங்களத்தான் சாமி முடியல விடியுறதுல இருந்து அடையிற சேட்டை ஏன்தான் உங்களுக்கு லீவ் தர்றாங்களோ….
ஆமாப்பா உங்க சேவை நாட்டுக்கு தேவை முதல்ல வேலைக்கு கிளம்புங்க இனிமே பாப்பாவை குறை சொன்னீங்க உங்ககிட்ட பேச மாட்டேன் ஜாக்கிரதை..
அட நீ வேற ஏன்டா வாயை தொறக்கல போதுமா ...ஊர்ல என்ன கண்டா பயத்தில நடுங்குறான் வீட்டுல நண்டு சிண்டு கூட மதிக்க மாட்டைக்குது என புலம்பி கொண்டே போனவனை கண்டு பாலா ஓடி போய் முதுகில் தொங்கி கொண்டு..
கோவமா ப்பா….
ஆமாடா இப்ப பிறந்த பாப்பாவுக்கு என்ன டீல்ல விடுறியே ஜூனியர்… ஒரு நாள் டூருக்கு பாலாவை அனுப்பி வைத்துவிட்டு கிருத்திகாவை படுத்திய பாட்டில் அவளுக்கு தலை வலியே வந்துவிட்டது இவன் குழந்தையா அவன் குழந்தையா என பல நேரம் தெரியாது ஊரை நடுங்க வைக்கும் ஐபிஏஸ் ஆனால் வீட்டில் எப்போதும் அவன் தனிரகம் தான்… பாசத்தை கொடுக்கவும் எடுக்கவும் அவனுக்கு மட்டுமே தெரியும்…
சரி சரி விடுங்க அப்பா இப்ப என்ன.. உங்க கூட வருணும் அவவளவுதான அழாதீங்க. வாங்க என அன்பு முதுகில் தொங்கி கொண்டு போன தன் மகனையும் கணவனையும் பார்த்த கிருத்திகா முகம் வாழ்வின் நிறைவை பெற்றதில் பரிபூரணத்தை வெளிப்படுத்தியது..அன்புவுக்கு ஆயிரம் பிள்ளைகள் வந்தாலும் பாலாவே தலைப்பிள்ளை அவன் கொண்ட பாசம் எப்போதும் மாறாது….
வெயில் ஒருகாலம் ,பனி ஒரு காலம் ... இன்பம் ஒரு காலம், துன்பம் ஒரு காலம் ..காலச்சக்கரத்தில் எல்லாம் மாறி மாறி வரத்தான் செய்யும் .. அதற்காக ஓடுங்கி போய் விட வேண்டுமா?....தூற்றுவோர் தூற்றட்டும் , போற்றுவோர் போற்றட்டும்..நம் வாழ்க்கை நம் கையில் நடந்ததை நினைத்து வருந்தி என்ன பயன்.. நாளை உன் கையில் என எதிர் நீச்சலடி, வானம் வசப்படும்.. வசந்தம் உன் வாசல் தேடி வரும்.....
நன்றி